ஜனவரி மாத ”இலக்கிய வட்டம்” கூட்டம் 10-01-2016 ஞாயிறு பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும்.
இடம் பூன் கெங் சாலையில் உள்ள காலாங் சமூக மன்றம்,
பேச்சாளர் கலைமகள் பத்திரிகை ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்.
தலைப்பு :- கம்பன் – ஒரு பத்திரிகையாளன்.
வழக்கம் போல வெண்பாவில் அழைப்பு.
எங்கணும் இல்லை, இவரொத்த பேச்சாளர்;
சங்கரனார் பேச்சென்றும் சர்க்கரையே! – பொங்குதமிழ்
பேச்சினால் பீடுமிகப் பெற்றவர்க்(கு) உற்றபுகழ்,
ஆச்சரியம் இல்லை அறி.
குலையாத நல்லாற்றல் கொண்டவராம்; நல்ல
”கலைமகளி”ன் ஆசிரியர் கண்டோம். – அலைஅலையாச்
சாடிவரும் செய்தி சகலருக்கும் ஈந்திடுவார்;
ஓடிவந்து நீமாந்(து) உவப்பு.
பத்திரிகை ஆசிரியர் பாங்கினில் கம்பன்சீர்,
சித்தரித்(து) ஈவார் சிறப்புடனே. – வித்தகர்தம்
மாரியெனும் பேச்சால் மகிழ்வுறவே வந்திடுவீர்
கூறியதை உள்வாங்கிக் கொண்டு.
அனைவரும் வருக என்று கேட்டுக்கொள்கிறோம்.
– அ. கி. வ