ரஜினி காந்த் பாஜக.,வுக்கு வந்தால் மகிழ்ச்சி: பொன்.ராதாகிருஷ்ணன்

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Published:

pon radhakrishnan - 2026

ராஜபாளையம்:
ரஜினி காந்த் பாஜகவுக்கு வந்தால் மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

மறைந்த ராம்கோ குழுமத் தலைவர் பி.ஆர். ராமசுப்பிரமணிய ராஜாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்துக்கு வந்திருந்தார் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.

அவரிடம் பின்னர் செய்தியாளர்கள் அரசியல் நிலவரங்கள் குறித்து கேள்விகளைக் கேட்டனர் அப்போது அவர்,

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் முழு மனதுடன் வரவேற்கிறேன். அவர் பாஜக.,வுக்கு வந்தால் மிக மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.

அதிமுக இணைந்தாலும், உடைந்தாலும் அதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. பிற கட்சிகளின் உள்கட்சி விவகாரங்களில் பாஜக., தலையிடாது. அதிமுகவின் பலவீனத்தைப் பயன்படுத்தி திமுக தன்னை மேலும் வளர்க்க நினைக்கிறது. ஆனால், தான் செய்த தவறுகளை அது மறைக்கிறது.

‘நீட்’ தேர்வு விஷயத்தில் தமிழக மாணவர்களை அரசியல் கட்சிகள் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றன.

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வீட்டிலும், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியதில் பாஜக.,வுக்கு எவ்விதத்திலும் தொடர்பு இல்லை. அவ்வாறு இருப்பதாக சிலர் கூறுவது மிகவும் தவறானது… என்று கூறினார்.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

Related articles

Recent articles

spot_img