தமிழகத்தில் இன்று (ஏப்.,22) மேலும் 33 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து, மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1629 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எண்ணிக்கை 18 என்ற அளவில் உள்ளது. இன்று புதிதாக உயிரிழப்பு ஏதும் இல்லை.
தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப் பட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது…
தமிழகத்தில் இன்று மேலும் 33 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தஞ்சாவூரில் 5 பேரும், மதுரையில் 4 பேரும் புதிதாக பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால், மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1629 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 2,10,538 பேர் சோதனை செய்யப் பட்டுள்ளதாகவும், 1,09,972 பேர் தனிமைப் படுத்தப் பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், வீட்டுக் கண்காணிப்பில் 23,760 பேரும், அரசு இடங்களில் கண்காணிப்பில் 155 பேரும் உள்ளனர்.
இன்று மட்டும் 27 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 662. தற்போது 946 பேர் சிகிச்சையில் உள்ளனர்.