கொரோனா முடக்கம்: செங்கோட்டையில் பாஜக.,வினரின் உதவிகள்!

உள்ளூர் செய்திகள் நெல்லை லைஃப் ஸ்டைல்
sengottai help bjp - 2026

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டு, தொழில்கள் முடங்கி, மக்கள் வீடுகளுக்குள் அடங்கிப் போயிருக்கும் நிலையில், பலரும் அன்றாட வாழ்க்கைக்கு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.

அத்தகைய மக்களுக்கு வீடுவீடாகச் சென்று, அரிசி, மளிகைப் பொருள்கள், ஒரு வாரத்துக்குத் தேவையான காய்கறிகள் என ‘மோடி கிட்’ என்ற பெயரில் உள்ளூர் பாஜக.,வினர் தங்கள் செலவில் பரிசுத் தொகுப்பை வழங்கி வருகின்றனர்.

sengottai help bjp1 - 2026

அவ்வகையில் செங்கோட்டை நகர பாரதிய ஜனதா கட்சியின் பொருளாளர் ஆர்.கே.ராஜன், சுமார் ரூபாய் ஒன்றரை லட்சம் (₹1,50,000/) மதிப்புள்ள நிவாரண பொருட்களை (மோடி கிட்) பொதுமக்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் செங்கோட்டை காவல் உதவி ஆய்வாளர் கோபால் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி பொருட்களை கொடுத்து துவக்கி வைத்தார்கள்.

தலா 5 கிலோ அரிசி, 5 கிலோ காய்கறிகள், ரூபாய் 450 மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டன.

modi kit horz - 2026

இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் K.மாரியப்பன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சீனிவாசன், நகர தலைவர் வேம்புராஜ், பொது செயலாளர் மணிகண்டன், செயலாளர் சுப்பிரமணியன், முன்னாள் இளைஞரணி தலைவர் வி.மாரி, இந்து முன்னணியைச் சேர்ந்த நாணயம் கணேசன் மற்றும் பாரதிய ஜனதா கட்சி, இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு, நிவாரணப் பொருள்களை வழங்குவதில் துணை நின்றார்கள்.

செங்கோட்டை நகர காவல் துறையினரின் அனுமதி மற்றும் உதவியுடன் இந்த நிவாரண பரிசுப் பொருள்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப் பட்டன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.