சாஹோ திரைப்படம் ! வெளிவர தாமதம்?

சினி நியூஸ் சினிமா லைஃப் ஸ்டைல்

saahoo e1563518108963 - 2026

பாகுபலி புகழ் நடிகர் பிரபாஸின் அடுத்தப் படம், ரூ. 150 கோடியில் உருவாகியுள்ள சாஹோ. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது.

பாகுபலி 2 படத்துக்கு பிரபாஸ் நடிக்கும் படம் என்பதால் சாஹோ படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. யூவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு இசை – ஷங்கர்-இசான்-லாய். ஷ்ரதா கபூர், ஜாக்கி ஷெராப், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி போன்றோர் நடிக்கிறார்கள்.

இந்தப் படம் ஆகஸ்ட் 15 அன்று வெளிவருவதாக இருந்தது. ஆனால் தற்போது ஆகஸ்ட் 30 அன்று வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சண்டைக்காட்சிகள் படமாக்குவதில் தத்ரூபத்தைக் கொண்டு வர முயற்சி செய்வதால் படத்தின் பணிகளை முடிக்க  கால அவகாசம் தேவைப்படுகிறது. இதன் காரணமாக ஆகஸ்ட் 30-க்குப் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.