அஜித் படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த மெகா ஸ்டார்!

Published:

ajith 2

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி அவர்கள் கடந்த ஆண்டு ‘சயிர நரசிம ரெட்டி’ படத்தின் மூலம் பிரமாண்டமாக ரீ-என்ட்ரி கொடுத்தார். மலையாள படமான லூசிஃபர் படத்தில் நடிப்பார் என பல தகவல் வெளியானதை அடித்து தற்போது தமிழில் தல அஜித் நடித்த ‘வேதாளம்’ திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்க சிரஞ்சீவி ஆர்வமாக உள்ளதாகவும் இந்த படம் தான் சிரஞ்சீவியின் அடுத்த படமாக இருக்கும் என்று பேசப்படுகிறது.

chiranjeevi megastar

இப்படத்திற்கான முறையான அறிவிப்பு வரும் 22ம் தேதி சிரஞ்சீவியின் பிறந்த நாளன்று அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

தமிழில் அஜீத், ஸ்ருதிஹாசன் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கிய ‘வேதாளம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த திரைப்படத்தில் இரண்டு கெட்டப்புகளில் அஜித் நடித்து இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தல படத்தை ரீமேக் செய்யும் அளவுக்கு அவருக்கு வேதாளம் படம் ரொம்ப பிடித்து போய்விட்டதாம்.

மலையாள திரையுலகில் பிளாக் பஸ்டர் ஹிட் ஆன படம் லூசிஃபர். இந்த படத்தின் ரீமேக் யார் செய்ய போகிறார் என கடும் போட்டி நிலவிவருகிறது. பிரபாஸ் நடிப்பில் உருவான ‘சாஹோ’ படத்தை இயக்கிய இயக்குனர் சுஜீத்தின் இயக்கத்தில் லூசிஃபர் என்ற மலையாள திரைப்படத்தின் ரீமேக்கில் சிரஞ்சீவி நடிப்பார். இதுகுறித்து அறிவிப்பு அவருடைய பிறந்த நாளில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளிவந்தன.

மோகன்லாலின் ‘லூசிஃபர் திரைப்படம் மலையாளத்தில் மிகப்பெரிய ஹிட் என்பதும், தமிழ் உள்பட பல மொழிகளில் இந்த படத்தை ரீமேக் செய்ய முயற்சிகள் நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள புதிய தகவலின்படி லூசிஃபர் ரீமேக்கில் நடிக்க சிரஞ்சீவி ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது

தற்போது சிரஞ்சீவி கொரட்டலா சிவா இயக்கத்தில் ‘ஆச்சாரியா’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளதால் சிரஞ்சீவியின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகி வருகிறது.

Related articles

Recent articles

spot_img