இந்து மக்களின் கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் கலெக்டர் அலுவலகம் முன் முற்றுகை போராட்டடாம் நடைபெறும் என செங்கோட்டையில் நடந்த அனைத்து இந்து சமுதாயக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டது.
செங்கோட்டையில் அனைத்து இந்து சமுதாய கூட்டம் சேனைதலைவர் மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு குருசாமி தலைமை வகித்தார். மாரியப்பன், மணிகண்டன், முத்துமாரிப்பன், முருகன் முன்னிலை வகித்துதனர். சீனிவாசன் வரவேற்றார். விசுவ இந்து பரிஷத் மாநில பொறுப்பாளர் சரவணகார்த்திகேயன் சிறப்புரையாற்றறினார்.
கோவில்களில் திருவிழாக்கள் பாரம்பரிய வழியில் நடத்திடவேண்டும். இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கி, வாண வேடிக்கை உள்ளிட்ட தடைகளை நீக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் சிறப்பாக நடத்திடவும், அனைத்து சமுதாயம் சார்பில் விநாயகர் சிலை எடுத்து குடும்பத்துடன் ஊர்வலத்தில் கலந்து கொள்ள வேண்டும். மக்களின் கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் கலெக்டர் அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் அனைத்து சமுதாய தலைவர்கள், இந்து சமுதாய பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் முருகேசன் நன்றி கூறினார்.



