ஓட்டு வங்கி அரசியல் லாபத்திற்காக திமுக தமிழர்கள் உரிமையை நசுக்குகிறது. இதனை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது என்று, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
நேற்று முஸ்லிம்களுக்கான சாதி சான்றிதழ் பற்றிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது அப்பட்டமான சந்தர்ப்பவாதம். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகளை குறிவைத்து எடுக்கப்பட்ட முடிவு.
அதேசமயம் இந்துக்கள் ஏமாளிகள் தான் அவர்களுக்கு தங்கள் உரிமை பறிபோவதை பற்றிய உணர்வு இல்லாமல் சாதிவாரியாக பிரித்தும், காசுகொடுத்தும் அவர்களின் வாக்குகளை பெற்று விடலாம் என்ற தைரியத்தில் திமுக இந்துக்களுக்கு இந்த துரோகத்தை செய்துள்ளது.
பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு சலுகையில் உள் ஒதுக்கீடாக 3.5 சதவீதம் ஏற்படுத்தி, அந்த இடங்களை நிரப்ப மாநில அரசு முன்னுரிமை அளிக்கிறது. இதன் மூலம் அரசு நிர்வாகத்தில் முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பை திமுக திட்டமிட்டு நடைமுறைப் படுத்துகிறது என்பதை இந்து சமுதாயம் உணர வேண்டும். இந்த உள் ஒதுக்கீட்டைத்தாண்டி பிற பி.சி. இடங்களிலும் மற்றவர்களுக்கான இடங்களிலும்கூட முஸ்லிம்கள் அரசு வேலைவாய்ப்பை பெறலாம்.
மேலும் லப்பை, ராவுத்தர் என்ற முஸ்லிம்களில் உள்ள சாதிபிரிவு குறிப்பிடாமல் பி.சி. என்று சான்றளிக்க இந்த அரசாணை கூறியுள்ளது. இத்தகைய மறைமுக செயலால் அனைத்து முஸ்லிம்களும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் வருவதற்கு வாய்ப்பு உருவாக்கப்படுகிறது என சந்தேகம் ஏற்படுகிறது. முஸ்லிம்களில் உள்ள சாதிபிரிவினையை மறைக்க திமுக அரசு முனைகிறது.
ஆக இந்த அரசாணையின் படி திமுகவின் நோக்கம் ஓட்டு வங்கி அரசியல் என்பது திட்டவட்டமாக தெரிகிறது. மேலும் இந்துவாக இருப்பவர்கள் முஸ்லிமாக மதம் மாறினாலும் பிற்படுத்தப்பட்ட சமூகம் என்ற பி.சி. சான்றிதழ் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்துக்களை மதம் மாற தூண்டும் செயல் என்று இந்து முன்னணி குற்றம் சாட்டுகிறது.
அதே சமயம், அருந்ததியர், காட்டுநாயக்கர்கள் என பல சமூகங்களுக்கு சாதி சான்றிதழ் தராமல் அரசு அதிகாரிகள் இழுத்தடிக்கிறார்கள் என்பதை செய்திகளில் பார்க்கிறோம். இந்துக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கிட அலட்சியமாகவும், மெத்தனமாகவும் நடந்துகொள்ளும் அதிகாரிகளை எதிர்த்து போராடி அவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு உரிமையை பெற்று தர இந்து முன்னணி சென்ற காலங்களில் போராட்டம் நடத்தி பெற்றுத் தந்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு தாய் தன் வாரிசுக்காக சாதி சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் படிப்பை தொடர முடியாத நிலையில் தற்கொலை செய்து கொண்டார். இப்படி பல பிரச்சினைகளை இந்து சமுதாயம் சந்தித்த போதிலும் இவற்றிற்கு திமுக அரசு தீர்வுகாண துடிக்கவில்லை. காரணம் இந்துக்கள் ஒட்டுமொத்தமாக ஒரு கட்சிக்கு வாக்களிப்பதில்லை. ஆனால் முஸ்லிம் கிறித்தவர்கள் அவர்கள் மதத்தலைவர்கள் ஆதரிக்கும் கட்சிக்கு வாக்களிக்கிறார்கள் என்பதற்காக திமுக, அவர்கள் நலனுக்காக சிந்திக்கிறது. அந்த மதத்தலைவர்கள் கோரிக்கையை ஏற்று செயல்படுகிறது.
இத்தகைய போக்கு ஜனநாயக விரோதமானது.
இந்துகளும் சாதி, அரசியல் கட்சி முதலானவற்றை தாண்டி இந்து சமுதாய நலனுக்கு உறுதி அளிப்பவர்களுக்கு வாக்கு அளிப்பதுடன், இந்துக்களின் நலனுக்கு எதிராக செயல்படுபவர்களை தேர்தலில் தோற்கடிக்கவும் வேண்டும்.
இந்துக்கள் விழிப்புணர்வு பெறவில்லை என்றால் இந்த திராவிட அரசியல்வாதிகள் இந்துக்களுக்கு உரிமையே இல்லாமல் செய்து, வாழ்வாதாரத்தையே சீர்குலைத்து விடுவார்கள் என்று இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த அரசாணையை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.