spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளித்தால் தமிழகம் பாதிக்கும் என ஜெயலலிதா ஏன் சொன்னார்?

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளித்தால் தமிழகம் பாதிக்கும் என ஜெயலலிதா ஏன் சொன்னார்?

- Advertisement -

24.08.2014ல் அப்போது மோடி பிரதமராகப் பதவி ஏற்ற புதிதில், முதல்வராக இருந்த ஜெயலலிதா ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் சில முக்கியமான விஷயங்களைப் பட்டியலிட்டுள்ளார். ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல் படுத்தப் படுவதற்கு முன்பு உள்ள நிலைப்பாடு இது என்றாலும், வரி வருமானப் பகிர்வு என்பதில், கிட்டத்தட்ட இதில் சுட்டிக் காட்டப் படுவதே பொருந்தும்.

இந்தக் கடிதத்தில் அவர் கூறியுள்ள சில முக்கியமான அம்சங்கள்…

2000 ஆம் ஆண்டில் பிரிக்கப்பட்ட ஜார்க்கண்ட், உத்தராஞ்சல், சட்டீஸ்கர் போன்றவை, அப்போதிருந்த பெரிய மாநிலங்களான மத்தியப் பிரதேசம், பீகார், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் பரப்பில் இருந்து பிரிக்கப்பட்டு, ஒன்றிணைக்கப் பட்டது. இவை எல்லாம் அப்போது புதிதாகக் கட்டமைக்கப்பட்ட மாநிலங்கள். உத்தராஞ்சல் ஒரு மலைப் பிரதேச மாநிலமாக கட்டமைக்கப் பட்டது. அதற்கு மலைப் பிரதேச மாநிலங்களான ஹிமாச்சல், ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களைப் போன்ற சிறப்பு அந்தஸ்து பொருந்தும். மற்ற இரு மாநிலங்களுக்கு அப்படி எதுவும் கொடுக்கப்படவில்லை. ஆந்திரப் பிரதேச விஷயத்தில், ஒரே ஒரு மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டது. தெலங்கானா, ஆந்திரா என்று! எனவே இதில் சிறப்பு அந்தஸ்து எதற்கு?

2014ம் வருட ஆந்திரப் பிரதேச மறுகட்டமைப்பு சட்டத்தின் படி, ஏற்கெனவே தேவையான மற்றும் கணிசமான பொருளாதாரத் தொகுப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த இரு மாநில விஷயத்தில், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கிறோம் என்று கூறி, பிராந்திய அடிப்படையிலான வரிச்சலுகை வழங்கும் விஷயத்தில் எச்சரிக்கையுடன் அணுக வேண்டும். இந்த வரிச்சலுகை விதிவிலக்குகள், பொருளாதார சீர்திருத்தங்களின் அடிப்படை முன்னேற்றத்தில் எதிர்விளைவை ஏற்படுத்தும். இது அண்டை மாநிலங்களை பாதிக்கும்.

ஐ.மு. கூட்டணி அரசு, குறுகிய கால அரசியல் நோக்கைக் கருதி இது போன்ற பொருந்தாத, தெளிவற்ற வாக்குறுதிகளை ஆந்திரத்தின் விஷயத்தில் அளித்தது. இது முந்தைய ஐ.மு.கூட்டணி அரசின் தார்மீக தோல்வியைக் காட்டுகிறது. ஆனால் இந்த விவகாரத்தை அணுகுவதில் உங்கள் அரசு மிகுந்த அக்கறை காட்ட வேண்டும்.

இந்த விவகாரத்தின் அனைத்து அம்சங்களையும் நீங்கள் கண்டிப்பாக கருத்தில் கொண்டு, இறுதி முடிவை எடுக்கும்போது தமிழ்நாடு போன்ற அண்டை மாநிலங்களின் நலன்களை பாதுகாக்க வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று ஜெயலலிதா இந்தக் கடிதத்தில் தெளிவாகக் கூறியிருந்தார்….

பிரதமர் மோடி, அண்மையில் நாடாளுமன்றத்தில் பேசியபோது, வாஜ்பாய் காலத்தில் தொலைநோக்கோடு பிரிக்கப்பட்ட மாநிலங்கள் நிர்வாக சீர்த்திருத்த நடவடிக்கை என்றும், ஆந்திரப் பிரதேச தெலங்கானா பிரிவினை காங்கிரஸின் குறுகிய கால அரசியல் நோக்குள்ள பிரிவினை என்றும், அதனால்தான் பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேர்வதாகவும் கூறியிருந்தது, ஜெயலலிதாவின் இந்தக் கடிதத்தைப் பிரதிபலிப்பதாகவே அமைந்திருக்கிறது!

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கொடுத்தால் நம் மாநிலம் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்து பிரதமருக்கு அன்றைய முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதம்!

***

I recall that there was a spirited debate on this issue in the meeting of the National Development Council held in June, 2005, and I had also written to the then Prime Minister seeking withdrawal of such exemptions in August 2005. In the NDC meeting, almost all the Chief Ministers had even then favoured the scrapping of such exemptions as they significantly distorted the investment decisions of companies and corporate houses, thereby drastically affecting the investment climate in their own States.

Independent analysis has also acknowledged that the area-based exemption scheme was not calibrated properly and did not take into account the possibility off light of capital and relocation of units from other States in the country. Any extension of such area based concessions to Andhra Pradesh or Telangana would cause a huge flight of capital and relocation of industries, in particular from neighbouring States.

It would also make the neighbouring States totally uncompetitive.In fact, such concessions to new industries would render existing industries, both in neighbouring States and even in the States where such concessions are granted, completely uncompetitive. These are grave risks which cannot be ignored.Such area based exemptions are also fiscally very expensive.

The Statement of Revenue Foregone presented to Parliament in July, 2014, along with the Union Budget for 2014-15 indicates that the total revenue foregone through such area based tax concessions during 2013-14 was Rs.9267.5 crores in direct taxes and almost Rs.18,000 crores in excise duty. These are revenues which could have been shared with the States. If a similar concession is extended to the successor States of Andhra Pradesh or Telengana, the fiscal impact would be substantially greater, given the much larger size of the States and the fact that these States have a fairly well developed infrastructural base.

It must also be pointed out that when a bifurcation of three States took place in 2000, neither Jharkhand and Chattisgarh, two of the newly created States nor the residual States of Bihar, Madhya Pradesh and Uttar Pradesh received any such fiscal incentive. In the case of Uttarakhand, then Uttaranchal, the comparison could have been with Himachal Pradesh, another hill state with issues of difficult terrain and remoteness, which was already categorized as a special category state on par with the North Eastern States, Jammu and
Kashmir and Sikkim. A similar categorisation cannot be made in the case of either Andhra Pradesh or Telengana.

A very limited, time bound exemption may be justified to enable an area to recover from a natural disaster. An area based exemption was granted for a limited period of 3 years for the Kutch area of Gujarat in 2001 soon after the devastating earthquake that struck the area. However, when I made a similar request on 6th June, 2005, for a limited excise duty holiday for the areas affected by the catastrophic tsunami in Tamil Nadu in December 2004, no such concession was provided by the then UPA Government even when adequate justification existed.

The Andhra Pradesh State Re-organization Act, 2014, already contains a substantial and significant economic package. Hence, I strongly urge you to adopt a cautious approach to the complex issue of providing area based tax concessions in the name of encouraging economic development in these two States. Such exemptions run counter to one of the basic thrusts of economic reforms — a rational tax policy that is neutral, encourages a common market in the country, rewards competitive efficiency, and exploits comparative advantage. Any shift of investments from States with a strong infrastructure and trained manpower to other States motivated by tax reliefs alone would undo the two decade long work of rationalisation of tax structures.

Despite having put in place sunset clauses on area based exemptions during their two terms in office, the previous UPA Government, on grounds of sheer short term political expediency, offered this vaguely worded promise of taking appropriate fiscal measures including distortionary tax incentives. This reflects the moral bankruptcy of the previous UPA Government.

Your Government must exercise the greatest care in approaching this issue. Nothing should be done which would distort economic incentives or a level playing field and render States like Tamil Nadu uncompetitive vis a vis their neighbours. It would be highly illadvised to offer across the board area based tax concessions.

I am confident that you would definitely consider all aspects of this issue and ensure that the interests of neighbouring States like Tamil Nadu are fully protected while taking a final decision.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe