அரசியல் 2வது முறையாக திமுக., முயற்சி தோல்வி! அதிமுக., கூட்டணியில் இணைகிறார் விஜயகாந்த்!

2வது முறையாக திமுக., முயற்சி தோல்வி! அதிமுக., கூட்டணியில் இணைகிறார் விஜயகாந்த்!

-

- Advertisment -

சினிமா:

வடிவேலுவைப் போல்…கருணாநிதியால் காணாமல் போனவர்!

சினிமாத்துறை மூலம் வளர்ந்தவர் சினிமாத்துரை கருணாநிதி. ஆனால் அதற்காகப் பாடுபட்டவர்களோ, கணக்கு கேட்டார் என கண்மூடித் தனமாக விரட்டப் பட்டார்.

நடிகை சுனைனாவை மிரட்டிய புலி

நடிகை சுனைனாவை புலி ஒன்று மிரட்டியதாம்! புலியைக் கண்டு தாம் மிகவும் மிரண்டு போனதாக சுனைனா கூறியுள்ளார்.

அந்த 2 இட்லி ஒரு கோடி ரூவா… மேட்டர்லாம் வருமா இதுல..?!

அந்த 2 இட்லி ஒரு கோடி ரூவா… மேட்டர்லாம் வருமா இதுல..?!

அன்று கருணாநிதி பார்த்த பார்வை…! இன்றுவரை வடிவேலுக்கு தொடரும் சோகம்!

தமிழ்த் திரையுலகில் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருந்த நடிகர் வடிவேலுவை, தனது அரசியல் பார்வையினால் கருணாநிதி இழுத்தாலும் இழுத்தார், அன்று முதல் வடிவேலுவின் வாழ்க்கை சின்னாபின்னாமாகி விட்டது.

134-வதாக… சுடலையதிகாரம் படிச்சிருக்கீங்களா?

குறள் என்றாலே குறுகித் தரித்தது என்பதுதான்! இங்கும் ஒன்றேமுக்காலடியில், ஒரு வித அடி கொடுக்கின்றனர் திமுக.,வின் திராவிட அரசியலுக்கு!

திருக்கோபுரத்தின் மாட்சியும் திருமாவின் வீழ்ச்சியும்!

சமீபத்து திருமாவளவனின் ஹிந்து விரோதப் பேச்சு கோயில் கோபுரத்தைக்...

கணித மேதை ‘பீகாரின் ஐன்ஸ்டின்’ வசிஷ்ட நாராயண் சிங் காலமானார்!

கணித மேதை 'பீகாரின் ஐன்ஸ்டின்' வசிஷ்ட நாராயண் சிங் காலமானார்!

வாகனங்களில் ஆடு திருடுபவர்கள் குறித்து எச்சரிக்கை தேவை!

வாகனங்களில் ஆடு திருடுபவர்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு தகவல்கள் பரிமாறப்பட்டு வருகின்றன.

134-வதாக… சுடலையதிகாரம் படிச்சிருக்கீங்களா?

குறள் என்றாலே குறுகித் தரித்தது என்பதுதான்! இங்கும் ஒன்றேமுக்காலடியில், ஒரு வித அடி கொடுக்கின்றனர் திமுக.,வின் திராவிட அரசியலுக்கு!

திருப்பதி லட்டு பிரசாதத்தில் தலைமுடி! பக்தர்கள் அதிர்ச்சியுடன் புகார்!

திருப்பதி திருமலை ஏழுமலையான் லட்டு பிரசாதத்தில், தலைமுடி மற்றும் கத்தையாக நூல் இருந்ததைக் கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து புகாரும் செய்யப் பட்டுள்ளது.

கணித மேதை ‘பீகாரின் ஐன்ஸ்டின்’ வசிஷ்ட நாராயண் சிங் காலமானார்!

கணித மேதை 'பீகாரின் ஐன்ஸ்டின்' வசிஷ்ட நாராயண் சிங் காலமானார்!

முதல்வரை சந்தித்த தென்காசி ஆட்சியர்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து வாழ்த்து பெற்றார் தென்காசி மாவட்ட ஆட்சியர்

‘பஞ்சமி’ குறித்து ஆவணம் தாக்கல் செய்ய தலைமைச் செயலருக்கு நோட்டீஸ்!

ஏற்கெனவே, ஆளும் அதிமுக., அரசு திமுக.,வுக்கு சாதகமாக செயல்பட்டு வருவதாகக் கூறப் படும் நிலையில், தமிழக அரசு உண்மையான ஆவணங்களை ஆணையத்தில் தாக்கல் செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அரசு மருத்துவரை தாக்கினால் 10ஆண்டு சிறை; 10லட்சம் அபராதம்.! விரைவில் புதிய சட்டம்.

சட்ட வரைவின்படி மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை தாக்கி காயப்படுத்தினால் 3 முதல் 10 ஆண்டு வரை சிறை தண்டனையும், 2 லட்சம் முதல் 10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என கூறப்படுகிறது.

மேயர் பதவிக்கு போட்டியிட தயார் நிலையில் இருக்கிறேன் உதயநிதி; சீனியர்ஸ் சீரியஸ்.!

சென்னை மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் போட்டியிட கோரி திமுக இளைஞரணி அமைப்பாளர் விருப்பமனு தாக்கல் செய்தார்.

நெல்லையில் கனமழை: குற்றாலத்தில் குளிக்கத் தடை!

திருநெல்வேலி மாவட்டத்தில் விடிய விடிய மழை கொட்டியது அதிக பட்சமாக சேரன்மகாதேவி, பாளையங்கோட்டையில் 100 மி.மீ மழை பெய்தது. . கன மழை காரணமாக, குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதிபர் தேர்தல் விறுவிறு: இலங்கையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்குப்பதிவு!

15.9 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்க, 12,845 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப் பட்டிருக்கின்றன. இங்கே 22 மாவட்டங்கள் உள்ளன.

உள்ளாட்சித் தேர்தல்… அதிமுக., விருப்ப மனு தொடக்கம்!

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இதையொட்டி நெல்லை மாவட்ட அதிமுகவில் உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனு தாக்கல் நேற்று தொடங்கியது.
- Advertisement -
- Advertisement -

இரண்டாவது முறையாக திமுக., மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்துள்ளது. அதிமுக., கூட்டணியில் இணைய முடிவு செய்திருக்கிறார் விஜயகாந்த்! இந்நிலையில், தேமுதிக.,வுக்கு 5 தொகுதிகளும், 1 மாநிலங்களவை உறுப்பினர் தொகுதியும் வழங்க முடிவு செய்திருக்கிறது அதிமுக., தலைமை என்றும், அதனை விஜயகாந்த் தரப்பு ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில், அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், தி.மு.க. தலைமையில் மற்றொரு கூட்டணியும் அமைந்துள்ளது.

அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க. கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதே நேரம் திமுக., கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக., விடுதலைச் சிறுத்தைகள், கொங்குநாடு மக்கள் கட்சி, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன.

அதிமுக., கூட்டணியில் தே.மு.தி.க, த.மா.கா. கட்சிகளை சேர்ப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதே நேரம், தே.மு.தி.க.வை கூட்டணியில் சேர்க்க தி.மு.க.வும் முயன்றது.

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், 1 மாநிலங்களவை தொகுதியும் ஒதுக்கப்பட்டதால் அதை விட கூடுதலாக 1 தொகுதி ஒதுக்கினால் கூட்டணியில் சேருவதாக விஜயகாந்த் தரப்பு நிபந்தனை விதித்தது. ஆனால் தேமுதிக.வுக்கு அவ்வளவு தொகுதிகளை ஒதுக்க முடியாது என்று அ.தி.மு.க. தரப்பு கண்டிப்புடன் கூறியது.

இதனிடையே, தே.மு.தி.க.வுக்கு 5 நாடாளுமன்ற தொகுதிகளும், 1 மாநிலங்களவை இடமும் தருவதாக அ.தி.மு.க. கூறி உள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க. கட்சிகள் இருப்பதால் ஓட்டு வங்கி அதிகம் என்றும், இந்தக் கூட்டணியில் இணைந்தால் வெற்றி நிச்சயம் என்றும் சுதீஷிடம் அ.திமு.க. மூத்த நிர்வாகிகள் பேசியுள்ளனர்.

தேமுதிக., தங்கள் கூட்டணியில் இருப்பதையே பாஜக.,வும் விரும்புகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், பிரேமலதா விஜயகாந்த்தின் பிரசாரத்தை மோடி வெகுவாகப் பாராட்டினார். எனவே இந்த முறையும் தேமுதிக., தங்கள் கூட்டணியில் இருக்க வேண்டும் என்று மோடி வற்புறுத்தியதாகக் கூறப் படுகிறது. இதை அடுத்து தில்லியில் இருந்து வந்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சுதீஷிடம் தனிப்பட்ட வகையில் பேசினார்.

இதை அடுத்து, அதிமுக. கூட்டணியில் இணைய விஜயகாந்த் ஒப்புக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. தற்போது இக் கூட்டணியில் பாஜக.,வுக்கு 5 தொகுதிகளும், பாமக.,வுக்கு 7 தொகுதிகளும், புதுச்சேரி என்.ஆர். காங்கிரசுக்கு 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தேமுதிக.,வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப் படும் பட்சத்தில் தமிழ் மாநில காங்கிரஸுக்கு ஒரு தொகுதி ஒதுக்கிவிட்டு, அதிமுக., 21 இடங்களில் போட்டியிடும் என்று கூறப் படுகிறது.

வரும் 3 ஆம் தேதி, அதிமுக., தேமுதிக., இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று கூறப் படுகிறது. இதை அடுத்து, சென்னையில் வரும் மார்ச் 6ம் தேதி மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேமுதிக.,வை தங்கள் கூட்டணியில் சேர்க்க திமுக தரப்பு கடும் முயற்சிகளை மேற்கொண்டது. தங்கள் தரப்பில் 3 தொகுதி தருவதாகவும், காங்கிரஸ் வசம் இருந்து 2 பெற்றுத் தருவதாகவும் பேசிப் பார்த்தது. ஆனால் பேச்சு சுமுகமாக நடைபெறவில்லை என்று கூறப் படுகிறது. இதனால் திமுக. தரப்பு கடும் அதிருப்தி அடைந்துள்ளது.

இது இந்தத் தேர்தலில் திமுக, தரப்புக்கு அமைந்த இரண்டாவது தோல்வி. பாமக.,வை அணியில் சேர்க்க முயற்சி மேற்கொண்டது. ஆனால், அது முடியாமல் போனது. இப்போது தேமுதிக.,வும் கைநழுவிப் போனதால் கடும் அதிருப்தியில் இருக்கும் திமுக., தற்போது விஜயகாந்துக்கு எதிராகவும் அவதூறுப் பிரசாரத்தை மேற்கொள்ள ஆயத்தமாகி வருகிறது.

கடந்த சட்டசபைத் தேர்தலின் போது, விஜயகாந்தை தி.மு.க. கூட்டணியில் சேர்க்க கருணாநிதி கடும் முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், கடைசி நேரத்தில் பலன் கிடைக்காமல் கைநழுவிப் போனது. வைகோ.,வின் பெரும் முயற்சியில் தேமுதிக., மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து, அந்த வாக்குகள் திமுக.,வை தோல்வி அடையச்செய்ததால், மனம் உடைந்த கருணாநிதி அப்போது முதல் மௌனம் ஆகிவிட்டார்.

திமுக., ஆட்சிக் காலத்தில் மத்தியில் டி.ஆர்.பாலு கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்து அமைச்சராக இருந்த நேரத்தில் தான், விஜயகாந்த்தின் கோயம்பேடு மண்டபம் இடிக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து தீவிர அரசியல் களத்தில் குதித்த விஜயகாந்த், திமுக.,வை விரோதியாகவே பார்த்தார். ஆயினும் கருணாநிதியுடன் நட்புறவைப் பேணினார். அப்போதும் திமுக.,வுடன் கூட்டணி அமைக்கவில்லை. இப்போதும் அது தவிர்க்கப் பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.

 

Sponsors

Sponsors

Sponsors

Loading...

- Advertisement -
-Advertisement-
-Advertisement-

Follow Dhinasari :

17,949FansLike
170FollowersFollow
708FollowersFollow
14,500SubscribersSubscribe

சமையல் புதிது :

ஆரோக்கிய சமையல்: உளுத்தம் பருப்பு பாயாசம்!

உளுந்தை சிறிது நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து உலர வைத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.

குட்டிஸ் சாப்பிட்டு சட்டி காலியாகணுமா? இத செய்யுங்க!

ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, எண்ணெய் சிறிதளவு, தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு போன்று சற்று தளர்வான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.

ஆரோக்கிய சமையல்: பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தி

குழந்தைகள் கீரைன்னு சொன்னாலே அரை பர்லாங் ஓடுவாங்க அதுவும் கண்ணிற்கு மிகவும் நல்லதான பொன்னாங்கண்ணிக்கீரை சாப்பிடவே மாட்டாங்க.
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |

Loading...

Adblock Detected!

Our website Tamil Dhinasari is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.