எஸ்பிஐ வங்கி இன்று அதன் வாடிக்கையாளர்களுக்கு மனம் விரும்பும் அறிவிப்பு ஒன்றைச் செய்துள்ளது. ஆஹா! எஸ்பிஐ சேமிப்பு வங்கி கணக்குகளில் சராசரி மாத இருப்பு இப்போது தேவையில்லை என்பதுதான் அந்த இனிக்கும் செய்தி !
44.51 கோடி எஸ்பிஐ சேமிப்பு வங்கிக் கணக்குகளில் மாதாந்திர சராசரி தொகை- ஏஎம்பியை பராமரிப்பதற்கான கட்டணங்கள் இப்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது. தற்போது, எஸ்பிஐ சேமிப்பு வங்கி வாடிக்கையாளர்கள் முறையே மெட்ரோ, பாதி நகர மற்றும் கிராமப்புறங்களில் ரூ. 3,000, ரூ. 2.000 மற்றும் ரூ .1000 ஐ பராமரிக்க வேண்டும்.
தற்போது, சராசரி மாதாந்திர இருப்புத் தொகையை பராமரிப்பது என்பது, சேமிப்புக் கணக்குகளுக்கு தேவையில்லை என்று கூறியுள்ளது எஸ்.பி.ஐ.,
வாடிக்கையாளர்களுக்கு தொந்தரவில்லாத வங்கி அனுபவத்தை வழங்குவதற்கான ஒரு முக்கிய முடிவு எடுத்துள்ளது ஸ்டேட் பாங்க் நிர்வாகம். அதன்படி, அனைத்து சேமிப்பு வங்கி கணக்குகளுக்கும் மாதாந்திர இருப்பு (AMB) என்பது ரத்து செய்யப் படுகிறது. இந்த முடிவு, நாட்டில் நிதிப் புழக்கத்தை ஊக்குவிப்பதற்கான தூண்டுகோலாக அமையும்.
முன்னதாக, எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் சேமிப்புக் கணக்குக்கு முறையே மெட்ரோ, பாதி நகர மற்றும் கிராமப்புறங்களில் ரூ. 3,000, ரூ.2,000 மற்றும் ரூ.1,000 பராமரிக்க வேண்டும். அவ்வாறு பராமரிக்காவிட்டால், ரூ.15 வரை அபராதம் விதித்து வங்கி பிடித்தம்செய்து கொள்ளும். ஆனால், தற்போது ‘வாடிக்கையாளர்களே முதன்மையானவர்கள்’ என்ற அணுகுமுறையை மனதில் கொண்டு, வங்கி எஸ்.எம்.எஸ் கட்டணங்களையும் தள்ளுபடி செய்துள்ளது. வங்கியின் இந்த நடவடிக்கை வங்கியின் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் குறிப்பிடத்தக்க பயன் அளிக்கும். சேமிப்பு வங்கி கணக்கில் வட்டி விகிதத்தை 3 சதவீதமாக எஸ்பிஐ வகுத்துள்ளது.
தள்ளுபடி குறித்து எஸ்பிஐ தலைவர் ரஜ்னிஷ் குமார் கூறுகையில், “இந்த அறிவிப்பு மேலும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புன்னகையையும் மகிழ்ச்சியையும் தரும். AMB ஐ தள்ளுபடி செய்வது என்பது வாடிக்கையாளர்களுக்கு அதிக வசதியையும், உற்சாகமான வங்கி அனுபவத்தையும் வழங்குவதற்கான மற்றொரு முயற்சி. இந்த முயற்சி எங்கள் வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ மீதான அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். ” என்றார்.