
தமிழ் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது…
மார்ச் 10 அன்று, தமிழ் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்கக்குழுவிப் கூட்டமைப்பின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது, கூட்டமைப்பில் நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானங்கள் குறித்து அறிவிக்கப்பட்டது.
1. விநியோகஸ்தர்கள் படங்களை விநியோகித்து அதன் மூலம் வரும் வருவாய்க்கு விதிக்கப்படும் 10% TDS வரியை முற்றிலுமாக ரத்து செய்யவேண்டும் என்றும், இதற்கு மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தும் விதமாக, வரும் மார்ச் மாதம் 27ம் தேதி முதல் எந்த விநியோகஸ்தரும் படங்களை விநியோகிப்பதில்லை என்று ஒரு மனதாக முடிவேடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு விநியோகஸ்தர்களுக்கு விதிக்கப்படும் TDS வரியை நீக்கும் வரை நடைமுறையில் இருக்கும்.
2. தற்போது திரையரங்க நுழைவுக் கட்டணங்களுக்கான GST (12%) வரியுடன் கூடுதலாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு LBT (8%) கேளிக்கை வரி செலுத்துவதால் இது திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களுக்கும் கூடுதல் சுமையாக அமைகிறது. ஆகையால் மேற்படி வரியினை (8%) முற்றிலும் ரத்து செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்தர், செயலாளர் மன்னன், கோவை மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க தலைவர் ராஜமன்னார், திருநெல்வேலி மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க உப தலைவர் பிரதாப் ராஜா, மதுரை மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க செயலாளர் சாகுல் அமித் மற்றும் தமிழ் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க கூட்டமைப்பின் சங்க உறிப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Posts by Dhinasari Reporter:
- அமிர்தா வேளாண் கல்லூரி சார்பில் நீர்வடிப் பகுதி மற்றும் வறட்சி மேலாண்மை விழிப்பு உணர்வு நிகழ்ச்சி!
- செந்தூரில் முதல்வருக்கும் அமைச்சருக்கும் அரோஹரா போட்ட வர்ணனையாளர் மீது புகார்!
- நெல்லை – கொல்லம் பகல் நேர ரயில்கள் இயக்க பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை!
- மதுரை நகைக்கடை கொள்ளைச் சம்பவம்; மாட்டிய யூட்யூபர், இன்ஸ்டா பிரபலங்கள்!
- திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!


