ஹைதராபாத்:- சினிமா நடிகர் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் உதவியோடு ராஜநால நாகலட்சுமி என்ற பெண்மணிக்கு ஆபரேஷன் பஞ்சாராஹில்சில் உள்ள ஸ்டார் மருத்துவமனையில் வெற்றிகரமாக நடந்தேறியது. சிரஞ்சீவியின் உதவியால் அவருக்கு இந்த ஆபரேஷன் ஸ்டார் மருத்துவமனை சிஎம்டி எம் கோபிசந்து தலைமையில் நடந்தது.
சிரஞ்சீவி அவருடைய இதய அறுவை சிகிச்சைக்காக 5 லட்சம் ரூபாய் பண உதவி செய்தார். குண்டூரைச் சேர்ந்த நாகலட்சுமி சிரஞ்சீவியின் ரசிகை. ஆபரேஷன் முடிவடைந்தவுடன் டாக்டர் கோபிசந் சிரஞ்சீவிக்கு போன் செய்து வெற்றிகரமாக நடந்த விஷயத்தை தெரிவித்தார். சிரஞ்சீவி தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.
அகில பாரத சிரஞ்சீவி இளைஞர் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த ரவணம் சுவாமிநாயுடு என்பவர் அந்த பெண்மணி ஹைதராபாத் வருவதற்காக ஏற்பாடு செய்து இரண்டு தெலுங்கு மாநில போலீசாரிடம் இருந்தும் அனுமதி பெற்று மருத்துவமனையில் சேர்த்தார். சிரஞ்சீவி தனிப்பட்ட முறையில் அவருக்கு நன்றி தெரிவித்தார்.