அடப்பாவமே..!கொரோனா அச்சத்தால் 42 ஆயிரம் மரங்கள் ‘காலி’!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
tree cutting - 2026

கொரோனா அச்சத்தால் காஷ்மீரில் 42 ஆயிரம் மரங்களை வெட்டி வீழ்த்தியிருக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் பரவல் ஏற்படுத்திய அச்சத்தால் ஜம்மு-காஷ்மீரில் ஆயிரக்கணக்கில் மரங்களை வெட்டி உள்ளார்கள்.

கொரோனா வைரஸ் பரவுகிறது என்ற பயத்தால் 42,000 பெண் போப்லார் மரங்களை வெட்டி விட வேண்டும் என்று சென்ற வாரம் உள்ளூர் அரசு நிர்வாகம் சோஷல் பாரஸ்ட்டரி டிபார்ட்மென்டை வேண்டிக்கொண்டது. விவசாயிகள், தனியார் நில உரிமையாளர்கள் கூட பெண் போப்லார் மரங்களை வெட்டி வீழ்த்தி விடவேண்டும் என்று மாவட்ட அதிகாரிகளை கோரினார்கள்.

tree cutting1 - 2026

உள்ளூரில் ‘ருஸ்ஸி ஃப்ராஸ்’ என்று அழைக்கப்படும் போப்லார் மரங்கள், பருத்தி போன்ற வடிவத்தில் இருக்கும் மகரந்தப் பொடியை அல்லது விதைத்துகள்களை வெளியேற்றுகிறது. இதனால் சிலருக்கு சுவாசம் நுரையீரல் நோய்கள் வருகின்றன. போப்லார் மரங்களில் இருந்து வெளிவரும் விதைகளால் நோய் பரவுகிறது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதால் இந்த மரங்களை வெட்டி வீழ்த்தியுள்ளார்கள்.

ஆனால் கொரோனா வைரஸ் பரவலுக்கு அல்லது நுரையீரல் தொடர்பான உபாதைகளுக்கு இந்த மரத்தில் இருந்து வெளிவரும் விதைகளே காரணம் என்று நிரூபிக்கும் எந்த ஒரு விஞ்ஞான பரிசோதனை முடிவும் இதுவரை இல்லை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

அரசின் கோப்புகளின் படி 2 கோடி போப்லார் மரங்கள் காஷ்மீரில் வளர்ந்து வருகின்றன. இவற்றை நார்த் அமெரிக்கன் காட்டன் ட்ரீ (NACT) என்று கூட அழைப்பார்கள்.

மரச்சாமான்கள் உற்பத்தி தேவையை தீர்ப்பதன் மூலம் உள்ளூர் பொருளாதார அமைப்பை அதிகரிப்பதற்கும் மற்றும் வன வளத்தை அதிகரிப்பதற்கும் உலக வங்கி உதவியோடு சமுதாய வன ப்ராஜெக்ட் மூலம் 1982ல் இவை இந்த இடங்களில் நடப்பட்டன. அப்போதிலிருந்து இந்த மரங்கள் காஷ்மீரின் இயற்கை அழகு மற்றும் பச்சை பசேலென்ற கண்ணுக்கு குளிர்ச்சி அளிக்கும் வகையில் முக்கிய பங்கு வகித்து வருகின்றன.

tree cutting2 - 2026

மிக அதிக அளவில் இந்த மரங்களை தாம் வெட்டி விட இயலாது என்றும் இது சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் ஸ்ரீநகரில் உள்ள முகமது மௌஹீம் என்ற ஒரு பொட்டானிக்கல் அறிவியல் நிபுணர் கூறினார்.

இந்த மரங்களை அழிப்பது பல பறவைகள் மற்றும் உயிரினங்களின் வசிப்பிடங்களில் மீது பல விதங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார். மரங்களை வெட்டுவதற்கு எடுத்துள்ள தீர்மானம் சுற்றுச்சூழல் ஆபத்து என்று கூறினார். இது நிலத்தை அழிப்பதற்கு வழிவகுக்கும் மற்றும் ஆக்ஸிஜன் நிலையை குறைக்கும் என்றார். இவை அனைத்திற்கும் மற்றும் பசுமை உறை இழப்புக்கும் யார் பதில் சொல்லப் போகிறார்கள் என்றும் மௌஹீம் கேள்வி கேட்டார்.

2014ல் ஒரு நீதிமன்ற தீர்ப்பின்படி காஷ்மீர் அரசு 24,000 இது போன்ற மரங்களை வெட்டியது. இந்த மரங்களில் இருந்து வெளிப்படும் விதைகளின் துகள்கள் நுரையீரல் தொடர்பான பிரச்சினைகளைத் தோற்றுவிக்கிறது என்று குற்றம்சாட்டி பதிவு செய்த ஒரு மனுவின் மூலம் நீதிமன்றம் அப்போது அந்த தீர்ப்பை கூறியது. ஆனால் இந்த மரங்கள் வெளிப்படுத்தும் விதைத் துகள்கள் நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு காரணம் என்று முடிவு செய்வது ஆச்சரியமளிக்கிறது என்று உள்ளூர் மருத்துவக் கல்லூரி கூறியுள்ளது.

ஒரு பரிசோதனை மூலம் வீடுகளில் இருக்கும் தூசிகள் மூலமே நுரையீரல் உபாதைகள் அதிகமாக வருகின்றன என்று கண்டுபிடித்துள்ளார்கள்.

மிகக் குறைந்த செலவில் மர வேலைப்பாட்டுக்கு புகழ் பெற்றுள்ள பொப்லார் மரங்களை மேற்கூரை உத்தரம் (ரூஃபிங் ராஃப்டருக்கும்) மற்றும் ஆப்பிள், பேரிக்காய் மற்றும் பீச் போன்ற மதிப்பு மிகுந்த வன உற்பத்திகளை போக்குவரத்து செய்வதற்கு உபயோகிக்கும் கிரேட் டப்பாக்களை தயார் செய்வதற்கு உபயோகிப்பார்கள்.

இந்த மரங்களை மிக அதிக அளவில் வெட்டிவிட வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவிட்டதன் மூலம் ஏழைகளின் வாழ்வாதாரம் மீது அரசாங்கம் கை வைக்கிறது என்று புல்வாமா மாவட்டத்தில் உள்ள விவசாயி ஷபான் அக்பர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.