
காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது பழமொழி ஆனால் இப்போதெல்லாம் கொரோனா காலம் உள்ளபோதே கறந்துவிடு என்று இந்த பழமொழியின் அர்த்தத்தை உலகத்துக்கு சொல்லி செயல்படுத்திக் கொண்டிருக் கிறார்கள் சிலர். இஸ்லாமியர் ஒருவர் இது போல், மாந்திரீகம் என்ற பெயரில் பொது மக்களிடம் லட்சக்கணக்கில் பணம் கறந்த சம்பவம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஹைதராபாத்தில் போலி பாபா. அப்பாவி மக்களை ஏமாற்றி கொரானா வைரஸை முறியடிப்பதாக கூறி இஸ்மாயில் என்பவர் 70 பேரிடமிருந்து லட்சங்களை வசூல் செய்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் போலீசாரிடம் புகார் அளித்ததால் குற்றவாளியை கைது செய்தனர்.
கொரோனா வைரஸை நீக்குவற்கு ஒருபுறம் உலக நாடுகளெல்லாம் பரிசோதனையில் மூழ்கி இருக்கையில் மறுபுறம் அக்கிரம வாதிகள் அதனை கேஷ் செய்து கொண்டுள்ளார்கள்.
இந்த வகையிலேயே திருட்டு பாபா அவதாரம் எடுத்த ஒருவர் கொரோனாவை முறியடித்து விடுவேன் என்று கூறி மருந்துகள் தேவையில்லை என்றும் மந்திரங்கள் போதும் என்றும் பலரிடமிருந்தும் லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்துள்ளார். மியாபூரியில் உள்ள தாயத்துக்கள் கட்டும் இஸ்மாயில் பாபா என்பவர் கொரோனா வியாதியிலிருந்து காப்பாற்றுவேன் என்று கூறி தன்னிடம் வரும் மக்களை நம்ப வைத்துள்ளார்.
கொரோனாவுக்கு மருந்து அளிக்கிறேன் என்று கூறி தான் கொடுக்கும் தாயத்தினால் கொரோனா வைரஸ் அருகிலேயே வராது என்று நம்ப வைத்து ஒவ்வொருவரிடமும் 40 முதல் 50 ஆயிரம் வரை வசூல் செய்துள்ளார்.
பணத்தை வாங்கிக் கொண்ட பின் மருந்து எதுவும் கொடுக்காததால் ஏமாற்றப்பட்டோம் என்று உணர்ந்த பாதிக்கப்பட்டவர்கள் வெள்ளிக்கிழமை அன்று போலீசாரிடம் புகார் அளித்தனர். அதனால் களத்தில் இறங்கிய போலீசார் மூஸ்பெட் காலனியில் உள்ள பாபாவின் இடத்தை முற்றுகையிட்டனர்.
அவர் மந்திரங்கள் எலுமிச்சம்பழம் விபூதியால் பூஜைகள் செய்து அப்பாவிகளை எவ்வாறு மோசம் செய்கிறார் என்பதை நேரில் பார்த்தார்கள். அவரை கைப்பற்றி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றார்கள்.
இந்த பாபா செய்யும் ஏமாற்று வேலைகள் குறித்து மார்ச் மாதத்திலேயே தமக்கு புகார்கள் வந்தன என்றும் அப்போதிலிருந்து பாபா தப்பித்துக் கொண்டு திரிகிறார் என்றும் போலீசார் கூறுகிறார்கள். சுமார் 70 பேருக்கு மேலாக இஸ்மாயில் பாபாவினால் ஏமாற்றப்பட்டு உள்ளார்கள் என்று அவருடைய விசாரணையில் தெரிந்ததாக கூறினார்கள்.
கொரோனா பாதித்தவர்கள் ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என்றும் இப்படிப்பட்ட போலி பாபாக்களை நம்ப வேண்டாம் என்றும் மாய மந்திரங்களால் கொரோனா வைரஸ் போகாது என்றும் போலீசார் அங்குள்ள மக்களிடம் எடுத்துரைத்தார்கள்.