இருசக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவர் விபத்தில் உயிரிழப்பு!

கிரைம் நியூஸ் தமிழகம்
dead bady

சூளகிரி அருகே இருசக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், கல்லூரி மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள பீரேபாளையத்தைச் சோந்த தமிழரசன் (20), கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தாா்.

தமிழரசனின் அக்கா அமுதாவுக்கு ராமாபுரத்தில் உள்ள பசவண்ணா கோயிலில் வியாழக்கிழமை திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்தபின் தமிழரசன் தனது இருசக்கர வாகனத்தில் அலகுபாவி கிராமத்திலிருந்து சூளகிரி நோக்கி சென்றாா். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், தமிழரசன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த சூளகிரி போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று தமிழரசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.