கொரோனா: பரமக்குடி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபாகருக்கு தொற்று!

Published:

psramakudi admk

பரமக்குடி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருப்பவர் சதன் பிரபாகர். இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனை தனி வார்டில் எம்எல்ஏ சதன் பிரபாகர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே எம்எல்ஏ சதன் பிரபாகரின் மகன் மற்றும் உதவியாளருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். மேலும் அக்கட்சியின் 3 எம்.எல்.ஏக்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல் அமைச்சர் அன்பழகனுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதாக மருத்துவமனை அறிவித்தது. மேலும் அதிமுகவின் ஶ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ பழனி, அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா உறுதியானது. இந்நிலையில் இன்று பரமக்குடி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இதனையடுத்து அவருக்கு ராமநாதபுரம் அரசு மருத்துமனையில் தனி வார்டில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!

Related articles

Recent articles

spot_img