கணவருடன் இணைந்து உடல் உறுப்பை தானம் செய்த ஜெனிலியா!

அடடே... அப்படியா? இந்தியா உரத்த சிந்தனை
riteish genelia

தமிழில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் படத்தில் அறிமுகமானவர் ஜெனிலியா டிசோசா. குறும்புத்தனமான நடிப்பின் மூலம் பல ரசிகர்களைக் கவர்ந்தவர் தொடர்ந்து விஜயுடன் சச்சின், ஜெயம்ரவியுடன் சந்தோஷ் சுப்பிரமணியம், தனுஷுடன் உத்தமபுத்திரன், மீண்டும் விஜய்யுடன் வேலாயுதம் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி படங்களிலும் ஒரு ரவுண்ட் வந்தார் ஜெனிலியா. பாலிவுட்டில் இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு நடிப்பதை விட்டு விலகினார் ஜெனிலியா.

இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள். தேசிய மருத்துவ தினம் ஜூலை 1ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. இந்த மருத்துவர் தினத்தில் ஜெனிலியாவும் அவரது கணவர் ரித்தேஷ் தேஷ்முக்கும் உடல் உறுப்புகள் தானம் செய்திருக்கிறார்கள்.

ரித்தேஷ் தேஷ்முக் – ஜெனிலியா டிசோசா
இது குறித்து ஜெனிலியா அவருடைய சமூக வலைத் தளத்தில், நீண்ட நாட்களாகவே நானும் கணவரும் உடல் உறுப்பு தானம் குறித்து யோசித்துக் கொண்டிருந்தோம். ஆனால் அதற்கு நேரம் அமையாமல் இருந்தது.

மருத்துவர் தினத்தில் எங்களது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக முடிவுசெய்து வாக்குறுதி கொடுத்து இருக்கிறோம். அடுத்தவர்களுக்கு நாம் தரும் மிகப்பெரிய பரிசு வாழ்க்கை பரிசுதான். மற்ற உயிர்களைக் காப்பாற்ற இது போல் நீங்களும் உங்களது உடல் உறுப்புகளை தானம் செய்யுங்கள் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார். பாலிவுட்டில் இந்த தம்பதிக்கு பல பிரபலங்கள் ,ரசிகர்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.