ஆரத்தி தட்டில் விழும் காணிக்கைபணத்தை அர்ச்சகா்கள் எடுக்க தடை…..!

அடடே... அப்படியா? ஆலயங்கள் இந்தியா பொது தகவல்கள்

KARNADAGA 5 - 2026

கர்நாடகாவில், இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கிவரும் கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு சம்பள உயர்வு வழங்கியுள்ளது.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆரத்தி கொண்டுவரும்போது தட்டில் போடும் காணிக்கையை எடுக்கக்கூடாது என்று தடை போட்டுள்ளது.

கர்நாடகாவில் 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வருகிறது.

இந்நிலையில் கோயில்களில் பணியாற்றி வரும் அர்ச்சகர்களுக்கு சம்பள உயர்வு வழங்க கோரிக்கையை பல ஆண்டுகளாக வைத்து வந்தனர்.

இந்நிலையில் மாநில அரசு நேற்று வெளியிட்ட அரசாணையில், கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு 6வது ஊதிய குழு அடிப்படையில் சம்பள உயர்வு உள்பட பல சலுகைகள் வழங்கப்படும்.

அதே சமயத்தில் பக்தர்கள் ஆரத்தி தட்டில்போடும் காணிக்கைகளை அர்ச்சகர்கள் எடுத்து பயன்படுத்தாமல் கோயில் வருமானத்தில் சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளது.

கர்நாடக அரசின் இந்த உத்தரவு அர்ச்சகா்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.