நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அம்மையார் தமிழக வியாபாரிகளிடம் ஜி.எஸ்டி வரி பற்றி விவாதித்த போது கோயமுத்தூர் அன்னபூர்னா உணவக உரிமையாளர் கேட்ட கேள்விகள் ஏதோ பராசக்தி வசனம் கேட்டது போல் உபிக்களுக்க்கு தோன்றலாம்
உரிமைகுரல் படத்தில் எம்ஜி.ராம்சந்தர் கேட்டது போல் அதிமுகவினருக்கு கேட்கலாம், இல்லை ரஷ்ய லெனின் போல கம்யூனிஸ்டுகளுக்கோ, அய்யா நேருவின் சீன போர் குரல் போல் காங்கிரசாருக்கும் கேட்கலாம்
அவர்கள் அப்படித்தான், அவர்கள் எதுவும் யோசிக்கமாட்டார்கள், ஜிஎஸ்டிக்கு எதிராக அன்னபூர்ணா அதிபரே பொங்கிவிட்டார் என குதிப்பார்கள்
சரி, விவகாரத்தை கவனிக்கலாம்
அன்னபூர்ணா உணவக அதிபர் கேட்டது, இனிப்பு பலகாரத்துக்கு ஜி.எஸ்டி இல்லை காரவகைக்கு உண்டு, பேக்கரிக்கு இன்னொருவரி இதெல்லாம் எப்படி எங்களுக்கு சரியாகும் என்பது
மேலோட்டமாக இது சரியாக தோன்றலாம் ஆனால் அன்னார் பல விஷயங்களை மறைத்தார் அல்லது மறந்தார்
அப்படியே பத்திரிகைகளும் மறைத்தன
ஜிஎஸ்டி என்பது ஒரு நிறுவணத்தின் தொழிலுக்கு அதாவது அந்த நிறுவணம் என்ன தொழில் செய்கின்றதோ அதற்கு விதிக்கபடும் வரி, அங்கு மாற்றமில்லை
இந்த குபீர் தாளிப்பு புரட்சிவாதி மூன்று தொழில்கள் அதாவது மூன்று நிறுவணங்களை பதிவு செய்துல்ளார்
அது அன்னபூர்னா உணவகம், அன்னபூர்னா ஸ்வீட்ஸ், அன்னபூர்னா பேக்கரி என மூன்று கடைகளை மூன்று பெயரில் மூன்று வேறு வேறு உரிமங்களில் நடத்துகின்றார்
ஆக அந்த வரிமுறைபடி மூன்றுக்கும் வேறு வேறு ரசீதுதான் வரும் வரமுடியும்
அன்னார் சொல்வது என்னவென்றால் இந்த மூன்றையும் நான் ஒரே வளாகத்தில் நடத்துவேன் ஒரே வரிமுறை வேண்டும் என்கின்றார்
இவர் ஒருவருக்காக தேசத்தின் மொத்த சட்டத்தையும் எப்படி மாற்றமுடியும்
உண்மையில் அவர் மூன்று பலகாரங்களை ஒரு வாடிக்கைகாளருக்கு கொடுத்தால் மூன்று ர்சீது கொடுக்கவேண்டும் அவரின் தொழில் உரிமை அது அதை மீறுவது சட்டமீறல்
ஆக சட்டமீறலை செய்து கொண்டே அதனை தனக்காக சட்டத்தை மாற்றவேண்டும் என்கின்றார்
இதெல்லாம் அந்த அவையிலே தண்டிக்கவேண்டிய விஷயம் அம்மையார் நிர்மலாவும் வானதியும் சபை நாகரீகம் காத்தார்கள்
நிச்சயம் மூன்று ரசீது கொடுக்காமல் அரசை ஏமாற்றுகின்றீரா என நிதி அமைச்சர் சீறியிருக்கவேண்டும், ஆனால் அவர் புனகைத்து கொண்டே விட்டுவிட்டார்
பின் தனியாக அமைச்சரை அய்யா சந்தித்திருக்கின்றார் அங்கே ஜிஎஸ்டி என்றால் என்ன? உணவக உரிமை என்றால் என்ன , தொழிலுக்கு ஒரு ஜிஎஸ்டி என விளக்கபட்டு அன்னார் மன்னிப்பும் கோரிவிட்டார்
சரி, நிதி அமைச்சர் முன்னால் இப்படி ஒரு தொழில் முனைவோர் பேசமுடிகின்றது விவாதிக்க முடிகின்றது
ஆனால் த்மிழக கனிமவள அமைச்சர் முன் ஒரு மணல்குவாரிக்காரன் இப்படி பேசமுடியுமா? அய்யா முத்துசாமி முன்னால் டாஸ்மாக் பார் உரிமையாளன் தன் குறை சொல்லமுடியுமா?
அவ்வளவு ஏன் இந்து அறநிலையதுறை அமைச்சர் முன் ஒரு இந்து பக்தன் தன் குறையினை சொல்லமுடியுமா?
அதையெல்லாம் பற்றி பேசினால் அவன் சங்கி…