யூரோ 2021: தாக்குதல் ஆட்டம் ஆடாததால் தோற்ற ‘சிறந்த’ அணி!

Published:

euro cup 2021
euro cup 2021

யூரோ கோப்பை கால்பந்து போட்டிகள் 2021
– முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன் –

9வது நாளான இன்று இரண்டு ஆட்டங்கள் நடந்துள்ளன. இரண்டும் குரூப் ஏ பிரிவுப் போட்டிகள். அவையாவன …
(1) இத்தாலிக்கும் வேல்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி ரோம் நகரில் இந்திய நேரப்படி 20.06.2021 அன்று இரவு 2130 மணிக்கு நடந்தது.
(2) சுவிட்சர்லாந்து துருக்கி இடையில் பாகு நகரில் நகரில் இந்திய நேரப்படி 20.06.2021 அன்று இரவு 2130 மணிக்கு நடந்தது.

இத்தாலி Vs வேல்ஸ்
(இத்தாலி 1-0 என வெற்றி)

வேல்ஸ் தங்கள் யூரோ 2020 குரூப் ஏ ஆட்டங்களை இன்றைய பொட்டியோடு முடித்துக்கோண்ட்து. ரோமில் இத்தாலியை எதிர்கொண்ட அந்தப் போட்டி ஒரு கடினமான போட்டி. புதன்கிழமை பாகுவில் துருக்கியை எதிர்த்து அவர்கள் மறக்கமுடியாத வெற்றியைத் தொடர்ந்து, ஸ்டேடியோ ஒலிம்பிகோவில் ராபர்ட் பேஜ் (மேலாளர், வேல்ஸ் அணி) அணி கடைசி 16க்குள் செல்ல வாய்ப்பு இருக்கிறது.

ALSO READ:  IND Vs ZIM T20: தொடரை வென்ற இந்திய அணி! நற்பெயர் வாங்கிய சூரியவன்ஷி!

ஏற்கனவே குழுவில் அவர்கள் நான்கு புள்ளிகள் பெற்றுள்ளனர். நான்கு சிறந்த மூன்றாவது இடத்தில் உள்ள அணிகளில் ஒன்றாக வேல்ஸ் அணி வருகிறதா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

கரேத் பேல் அண்ட் கோ அதாவது, இத்தாலிய அணி, இன்றைய ஆட்ட்த்தைப் பற்றி எந்தவிதமான பிரமையும் கொண்டிருக்கவில்லை, துருக்கி மற்றும் சுவிட்சர்லாந்தை எதிர்த்து 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற பின்னர் இத்தாலி கோப்பையை வெல்லும் கனவில் இருக்கிறது.

இந்த மாலை அஜர்பைஜானில் துருக்கி, சுவிட்சர்லாந்து இரு அணிகளும் கட்டாயம் வெல்ல வேண்டிய சூழ்நிலையில் ஆடுகிறார்கள். ஆட்டத்தின் 39 வது நிமிடத்தில் இத்தாலி அணியின் ஒரே ஒரு கோலை மேட்டியோ பெசினா அடித்தார்.
ரஷ்யாவில் நடைபெற்ற 2018 உலகக் கோப்பைக்கு தகுதி பெறத் தவறிய பின்னர், இப்போட்டியின் மூலம் இத்தாலி அணி நாக் அவுட் கட்ட்த்திற்குச் செல்கிறது.

அவர்களின் கடைசி 29 போட்டிகளில் ஆட்டமிழக்காமல், கடைசி 10 போட்டிகளில் எதிரணி ஒவ்வொன்றையும் ஒரு கோல் கூட பொடவிடாமல் வென்றுள்ளார். இத்தாலிய அணியின் மேலாளரான ராபர்டோ மான்சினி, இத்தாலியின் அணியை முற்றிலுமாக புதுப்பித்துள்ளார், இன்றிரவு வெற்றி பெற்றதன் மூலம் அவர்கள் குரூப் Aஇல் முதலிடத்தையும், குரூப் Cஇன் ரன்னர்-அப் அணிக்கு எதிரான கடைசி -16 போட்டியில் விளையாடுவார்கள். அந்த அணி ஆஸ்திரியா அல்லது உக்ரைன் ஆக் இருக்கலாம். .

euro 2021
euro 2021

சுவிட்சர்லாந்து vs துருக்கி
(சுவிஸ் 3-1 என வெற்றி)


துருக்கிக்கு எதிராக 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று யூரோ 2020இல் சுவிட்சர்லாந்து குரூப் ஏ-ல் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஷெர்டான் ஷாகிரி இரண்டு சூப்பர் கோல்களை அடித்தார், ஆனால் இப்போது அவர்கள் கடைசி 16 ஐ எட்டுவார்களா என்ற ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

ALSO READ:  FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

வேல்ஸுடன் நான்கு புள்ளிகள், ஆனால் கோல் வித்தியாசத்தில் பின்னால் உள்ளனர். மூன்றாம் இடம் பிடிக்கும் ஆறு அனிகளில் இருந்து நான்கு சிறந்த அணிகள் நாக் அவுட்களில் ஒரு இடத்தைப் பெறுவர்.மூன்று தோல்விகளுடன் நான்காவது இடத்தைப் பிடித்த துருக்கி, போட்டிகள் தொடங்கும் முன்னால் ஒரு கருப்புக் குதிரை எனக் கருதப்பட்டனர். ஆனால் குழு கட்டத்தில் ஒரு மோசமான முயற்சிக்குப் பிறகு அவ்வணி வீட்டிற்குச் செல்லுகிறது.

இந்தப் போட்டியில் துருக்கிக்கு வாய்ப்புகள் இருந்தன, ஆனால் சுவிஸ் கீப்பர் யான் சோமர் போட்டியின் முதல் பாதியில் பல கோல்களைத் தடுத்தார். கோலடித்து சமன் செய்யவும் முயன்றனர். ஆனால் எதிரெதிர் தாக்குதலை முடிக்க ஷகிரி கோலடித்தபோது அவர்களின் குறைபாடுகள் வெளிப்பட்டன.

துருக்கியைப் பொறுத்தவரையில், அவர்களின் திறமை நிறைந்த அணி தாக்குதல் ஆட்டம் ஆடாததால், மோசமான முடிவு ஏற்பட்டது.

Related articles

Recent articles

spot_img