23/09/2019 11:24 PM

வாட்ஸ்அப் குரூப்ல கூட இருக்கக் கூடாது… ரஜினி கண்டிப்பு!

ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து நீக்கப்பட்டவர்களை வாட்ஸ்அப் குழுக்களில் சேர்க்க கூடாது என்று ரஜினி காந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இப்போது வாட்ஸ் அப் குழுக்கள் உருவாக்குவதும், ஒரு குழுவில் ஒரே எண்ணம் கொண்டவர்களை இணைப்பதும், அது பிடிக்கவில்லை எனில் அவர்கள் விலகுவதும் என வாழ்க்கையில் இதுவும் ஓர் அங்கமாகிவிட்டது.

வாட்ஸ் அப் குழுக்களில் இணைத்துவிட்டவர்கள் ஏதாவது பிரச்னை நேரிட்டால், அவர்களை அந்தக் குழுவில் இருந்து நீக்கினால் நட்புறவே கெட்டுப் போவது போல் அதனை பெரிய தன்மானப் பிரச்னையாகக் கருதுவதும் உண்டு.

ஆனால், சிலரோ வாட்ஸ் அப் விவகாரத்தை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. அவை ஏதோ தொடர்புக்கான சாதனம் மட்டுமே என்று எண்ணிக் கொள்வார்கள். சொல்லப் போனால், இவை எல்லாம் சிறுபிள்ளைத் தனமானது என்றோ, குழந்தைத்தனமானது என்றோ நினைப்பார்கள்.

ஆனால் அரசியல் ரீதியான அல்லது அமைப்பு ரீதியான இணைப்புகளைக் கொண்டிருப்பவர்கள், அந்தக் குழுவின் கொள்கையைப் பிரதிபலிப்பவராக இருக்கவேண்டியுள்ளது. இந்தக் காரணத்தால்தான், ரஜினி தனது மன்றத்தினருக்கு ஓர் அன்புக் கட்டளை இட்டுள்ளார்.

வாட்ஸ்அப் குழுவிற்கு ரஜினி மக்கள் மன்றம் என்று மட்டுமே பெயர் வைக்க வேண்டும்; அந்த அந்தப் பகுதி மன்றத்தினரை இணைத்து பெயர் வைக்கவேண்டும். ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து யாராவது நீக்கப்பட்டால், அவர்களை வாட்ஸ் அப் குழுக்களில் இருந்தும் நீக்கிவிட வேண்டும் என்று ரஜினிகாந்த் அறிவுறுத்தியிருப்பது இப்போது பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
#

Recent Articles

கீழடியா? தசாவதாரத்தின் முதல் அவதாரம் நிகழ்ந்த… ‘வைகைச் சமவெளி’ நாகரீகமா?!

2,100 ஆண்டுகளுக்கு முன் தங்கத்தால் செய்யப்பட்ட தெய்வச் சிலைகள் கூட இதுவரை கிடைக்கவில்லை. எந்த தெய்வத்தின் பெயரும் தங்கத்தில் எழுதி, இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை...!

பிகிலு பட போஸ்டர்… இறைச்சி வியாபாரிகள் டர்ர்ர்ர்…! காரணம் என்ன தெரியுமா?!

இறைச்சி வெட்டும் மரக்கட்டை மீது கால் வைத்து நடிகர் விஜய் தங்கள் தொழிலை இழிவுபடுத்தி விட்டதாகக் கூறி பிகில் பட சுவரொட்டியைக் கிழித்து, கோவை ஆட்சியர் அலுவலகம் முன் இறைச்சி வியாபாரிகள் போராட்டம் நடத்தினர்.

உதயண்ணா இருக்க… விஜயண்ணாவை தலைவன்னு தூக்கி விட… அவங்க என்ன இளிச்சவாயங்களா?! பிகில் விழாவில் டுமில் பேச்சு!

அவரது கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில், பலரும் ஆமாம் போட…. இதை அடுத்து ரசிகர்களின் ஏகோபித்த கோரிக்கையை ஏற்று, அந்த விழாவில் தாம் பேசியதை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் டேனியல் பாலாஜி.

4 புதிய நீதிபதிகள் பதவிஏற்பு! முழு பலத்தை அடைந்த உச்ச நீதிமன்றம்!

உச்ச நீதிமன்றத்துக்கு நியமனம் செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த நீதிபதி ராமசுப்பிரமணியன் உள்பட 4 புதிய நீதிபதிகள் இன்று பதவி ஏற்ற நிலையில் உச்ச நீதிமன்றம் முழு பலத்தை எட்டியுள்ளது.

3வது கட்ட பேச்சுவார்த்தை உடன்பாடு; லாரி நிறுத்த போராட்டம் வாபஸ்.!

லாரிகளுக்கு முறையான வாடகை நிர்ணயம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக நடத்தப்பட்ட போராட்டம் வட்டாட்சியர் தலைமையில் நடந்த 3வது கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் வாபஸ் பெறப்பட்டதாக கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Related Stories