pongal gift by cm - 2026

பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய் அனைவருக்கும் வழங்க கூடாது என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் தான் ரூ.ஆயிரம் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

எந்தப் புள்ளி விபரங்களும் இல்லாமல் எப்படி ரூ. 1000 அரசு வழங்கலாம் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், பச்சை நிற குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே அரசின் ரூ.1000 பரிசுத் தொகை வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், நீங்கள் கட்சிப் பணத்தை எடுத்து செலவிட்டால் நாங்கள் கேட்க மாட்டோம். அரசு பணத்தை செலவிடுகிறீர்கள்… எந்த நோக்கத்துக்காக ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படுகிறது என்று கேள்வி எழுப்பினர்.

முன்னதாக, கடந்த மூன்று நாட்களாக ரேஷன் கடைகளில் முதல் முன்னூறு நபர்கள் என கணக்கிட்டு, ரூ.1000 அனைவருக்கும் வழங்கப் பட்டுள்ளது. இந்நிலையில், இப்போது உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பால், வழங்கப்பட்டுவிட்ட பணம் எப்படி திரும்ப பெறப்படும் அல்லது மேல்முறையீடு, அல்லது அரசின் கொள்கை முடிவு என்று பல்வேறு பரிமாணங்களில் இந்தத் தீர்ப்பு இட்டுச் சென்றுள்ளது.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending