வாட்ஸ்அப் குரூப்ல கூட இருக்கக் கூடாது… ரஜினி கண்டிப்பு!

உரத்த சிந்தனை சினி நியூஸ் சினிமா புகார் பெட்டி பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
petta rajini - 2026

ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து நீக்கப்பட்டவர்களை வாட்ஸ்அப் குழுக்களில் சேர்க்க கூடாது என்று ரஜினி காந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இப்போது வாட்ஸ் அப் குழுக்கள் உருவாக்குவதும், ஒரு குழுவில் ஒரே எண்ணம் கொண்டவர்களை இணைப்பதும், அது பிடிக்கவில்லை எனில் அவர்கள் விலகுவதும் என வாழ்க்கையில் இதுவும் ஓர் அங்கமாகிவிட்டது.

வாட்ஸ் அப் குழுக்களில் இணைத்துவிட்டவர்கள் ஏதாவது பிரச்னை நேரிட்டால், அவர்களை அந்தக் குழுவில் இருந்து நீக்கினால் நட்புறவே கெட்டுப் போவது போல் அதனை பெரிய தன்மானப் பிரச்னையாகக் கருதுவதும் உண்டு.

ஆனால், சிலரோ வாட்ஸ் அப் விவகாரத்தை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. அவை ஏதோ தொடர்புக்கான சாதனம் மட்டுமே என்று எண்ணிக் கொள்வார்கள். சொல்லப் போனால், இவை எல்லாம் சிறுபிள்ளைத் தனமானது என்றோ, குழந்தைத்தனமானது என்றோ நினைப்பார்கள்.

ஆனால் அரசியல் ரீதியான அல்லது அமைப்பு ரீதியான இணைப்புகளைக் கொண்டிருப்பவர்கள், அந்தக் குழுவின் கொள்கையைப் பிரதிபலிப்பவராக இருக்கவேண்டியுள்ளது. இந்தக் காரணத்தால்தான், ரஜினி தனது மன்றத்தினருக்கு ஓர் அன்புக் கட்டளை இட்டுள்ளார்.

வாட்ஸ்அப் குழுவிற்கு ரஜினி மக்கள் மன்றம் என்று மட்டுமே பெயர் வைக்க வேண்டும்; அந்த அந்தப் பகுதி மன்றத்தினரை இணைத்து பெயர் வைக்கவேண்டும். ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து யாராவது நீக்கப்பட்டால், அவர்களை வாட்ஸ் அப் குழுக்களில் இருந்தும் நீக்கிவிட வேண்டும் என்று ரஜினிகாந்த் அறிவுறுத்தியிருப்பது இப்போது பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
#

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.