நாளை… படங்கள் ரீலீசாகுது… பாலைத் திருடி ‘கட்அவுட்’க்கு அபிஷேகம் செய்வார்கள்… ஜாக்கிரதை!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Published:

Kabali cutout - 2026

நாளை முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகின்றன. காலை நேரத்தில் பால் டப்பாக்களில் இருந்து பாலைத் திருடி, பாக்கெட் பாக்கெட்டாக கட் அவுட்களுக்கு பாலபிஷேகம் செய்ய ரசிகர் பட்டாளம் நடமாடும் எச்சரிக்கை என்று பால்முகவர் சங்கம் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.

பால் முகவர்கள் சங்கத்தின் சார்பில் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்ட அறிக்கையில்… தமிழகத்தில் முன்னணி நடிகர்கள் திரைப்படங்கள் வெளியாகும் போதெல்லாம் அவர்களின் கட்அவுட்களுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் எனும் பெயரில் ஆயிரக்கணக்கான லிட்டர் பாலினை வீணடிப்பதை நாம் அனைவரும் நன்கறிவோம். இதை தடுக்க வேண்டிய நடிகர்கள் அதனை அமைதியாக பார்த்து ரசிக்கிறார்கள்.

முன்னணி நடிகர்களின் கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வதற்காக ரசிகர்கள் எனும் போர்வையில் இருக்கும் சில சமூக விரோதிகள் நமது பால் முகவர்களின் கடைகளுக்கு வெளியே இறக்கி வைக்கப்பட்டிருக்கும் பாலினை திருடிச் சென்ற சம்பவங்கள் கடந்த காலங்களில் அரங்கேறியதையும், அதனால் பால் முகவர்கள் பலரும் வருமானத்தையும், வாழ்வாதாரத்தையும் இழந்ததையும் நாம் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டோம்.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

இந்த சூழ்நிலையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு நாளை (10.01.2019) நடிகர் ரஜினிகாந்த் நடித்த “பேட்ட” நடிகர் அஜீத்குமார் நடித்த “விஸ்வாசம்-2” ஆகிய திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன.

இந்நிலையில், பால் முகவர்கள் அனைவரும் தங்களின் கடைகளுக்கு முன் நள்ளிரவில் இறக்கி வைக்கப்படும் பாலினை கவனமுடன் பாதுகாத்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

ஏற்கெனவே பால் முகவர்களின் கடைகளுக்கு வெளியே இறக்கி வைக்கப்பட்ட பாலினை திருடிய கயவர்களை தகுந்த ஆதாரங்களோடு காவல்துறையில் புகார் அளித்தும் இது வரை எந்த புகார் மீதும் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்யவில்லை.

அதனால் பால் முகவர்களாகிய நாம் நமது வாழ்வாதாரத்தை, வருமானத்தை தக்க வைத்துக் கொள்ள, பாதுகாத்துக் கொள்ள தகுந்த முன்னெச்சரிக்கையோடு செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ரசிகர்கள் எனும் பெயரில் சமூக விரோதிகள் பாலினை திருடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு பால் முகவர்கள் தங்கள் பகுதியில் குழுவாக செயல்பட்டு சுழற்சி முறையில் நள்ளிரவு நேரங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுமாறும், சந்தேகத்திற்குரிய வகையில் எவரேனும் சுற்றித் திரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்து விட்டு சங்கத்தின் தலைமை நிர்வாகிகளையும் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்… என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

Related articles

Recent articles

spot_img