தூத்துக்குடியில் பிரமாண்டமாய் நிறைவு செய்த பாஜக., தலைவர் தமிழிசையின் பேரணி!

சற்றுமுன் தமிழகம் நெல்லை லைஃப் ஸ்டைல்

tamilisai vilathikulam - 2026

தமிழகம், புதுச்சேரியில் நடைபெற்ற 40 தொகுதி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 19 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் 18 ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக., சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தமிழகத் தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன், இன்று தூத்துக்குடியில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார்.

தமிழகத்தில் இன்று மாலையுடன் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம் மற்றும், சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு பெற்றது. பல்வேறு தலைவர்களும் தொகுதிகளில் சென்று பிரசாரம் செய்தனர்.

தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், தெரு தெருவாக, வீடு வீடாகச் சென்று வாக்குகள் திரட்டினார். இந்நிலையில், இன்று பிரமாண்ட பேரணியுடன், தனது பிரசாரத்தை நிறைவு செய்து கொண்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.