வேலூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் ரத்து!

சற்றுமுன் சென்னை தமிழகம்

velloremoneycaptured2 - 2026

பணப்பட்டுவாடா புகாரை அடுத்து, வேலூர் மக்களவைத் தேர்தல் ரத்து செய்யப் படுவதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

வேலூரில் வருமான வரித்துறை மேற்கொண்ட சோதனைகளைத் தொடர்ந்து, இந்த தேர்தல் ரத்தாகும் என்று கூறப் பட்டது. இந்நிலையில், நாளை மறு நாள் வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் மட்டும் ரத்து செய்யப் படுகிறது.

ரத்து செய்வதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவர் அளித்ததைத் தொடர்ந்து, வேலூர் மக்களவைத் தேர்தல் ரத்து செய்யப் படுவதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மீண்டும் தேர்தல் எப்போது நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் எதுவும் அறிவிக்கவில்லை.

பணப் பட்டுவாடா புகாரை அடுத்து வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து! தேர்தல் ஆணையம் பரிந்துரையை ஏற்று குடியரசு தலைவர் உத்தரவு!

வேலூரில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் ரூ.10.75 கோடி சிக்கியது! பணப்பட்டுவாடா தொடர்பாக திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் உள்ளிட்ட சிலரிடம் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.