நடிகைகளின் நிர்வாணப் படங்களை வெளியிடுவது கற்பழிப்பைவிட மோசமானது: ஹன்சிகா

Published:

நடிகைகளின் நிர்வாணப் படங்கள், ஆபாச வீடியோக்களை மோசடியாக உருவாக்கி வெளியிடுவது கற்பழிப்பை விட மோசமானது என்று கூறியுள்ளார் நடிகை ஹன்சிகா மோத்வானி. அண்மையில் ஹன்சிகாவின் குளியல் காட்சி வீடியோ என்ற பெயரில் வெளியான சில நிமிட ஆபாசப் படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குளியலறையில் கேமராவை மறைத்து வைத்து, ஹன்சிகா போன்ற பெண் குளிப்பதைப் படமாக்கியுள்ளனர். இந்த வீடியோவைப் பார்த்த பலரும் படத்திலிருப்பது ஹன்சிகாதான் என நம்பினர். இதுகுறித்து ஹன்சிகா தரப்பிலிருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. போலீசிலும் அவர் இது குறித்து புகார் தெரிவிக்கவில்லை. Hansika-Motwani இந்நிலையில் அந்த வீடியோப் பதிவு குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், “இந்த மாதிரி வீடியோக்கள் வெளியாவது மிகவும் வருத்தப்பட வேண்டிய ஒன்று. சினிமாவில் நாங்கள் சொகுசு வாழ்க்கை வாழவில்லை. கஷ்டப்பட்டு உழைத்து, மற்றவர்களைச் சந்தோஷமாக வைக்கிறோம். ஆனால் எங்களை இழிவுபடுத்துவதற்கு எப்படி மனசு வருகிறது என்று புரியவில்லை. இது, கற்பழிப்பை விடக் கொடுமையானது. எங்கள் மனதை புண்படுத்துகிறவர்களை கடவுள்தான் தண்டிக்க வேண்டும்,” என்று கூறியுள்ளார்.. தான் ஏன் போலீஸில் புகார் செய்யவில்லை என்பதற்கு பதிலாக, “அந்த வீடியோ படத்திலிருப்பது நான் இல்லை. பிறகு ஏன் புகார் செய்ய வேண்டும்?,” என்று கேட்டுள்ளார்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Related articles

Recent articles

spot_img