December 9, 2024, 12:02 AM
26.9 C
Chennai

6 வது நார்வே தமிழ் திரைப்பட விழா 2015 -தமிழர் விருதுகள் அறிவிப்பு: சிறந்த திரைப்படமாக “குக்கூ” தேர்வு

norway-cinefestiv நார்வேயில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்டு வரும் நார்வே சர்வதேச தமிழ் திரைப்படவிழாவில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 2014-ஆண்டுக்கான சிறந்த படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் சிறந்த படமாக ராஜு முருகன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த ‘குக்கூ’ படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும், சிறந்த நடிகருக்கான விருதுக்கு ‘காவியத் தலைவன்’ படத்தில் நடித்த சித்தார்த் தேர்வாகியிருக்கிறார். சிறந்த நடிகைக்கான விருது ‘காவியத் தலைவன் படத்திற்காக வேதிகாவுக்கு வழங்கப்படுகிறது. சிறந்த இயக்குனராக வசந்தபாலன், சிறந்த ஒளிப்பதிவாளராக வெற்றிவேல் மகேந்திரன் கயல் திரைப்படத்திற்காக, சிறந்த இசையமைப்பாளராக ‘குக்கூ’, ‘ஜிகர்தண்டா’ ஆகிய படங்களுக்காக சந்தோஷ் நாராயணன் தேர்வாகியிருக்கின்றனர். சிறந்த பாடகிக்கான விருது ‘என்னமோ எதோ’ படத்தில் புதிய உலகை என்ற பாடலை பாடியதற்காக வைக்கிறோம் விஜயலட்சுமி அவர்களுக்கு வழங்கப்படுகிறது. சிறந்த பாடகருக்கான விருது ‘காவியத் தலைவன்’ படத்தில் வரும் “வாங்க மக்கா வாங்க ” பாடலுக்காக ஹரிச்சரனுக்கு வழங்கப்படுகிறது. சிறந்த பாடலாசியர் விருது ‘குக்கூ’ படத்திற்காக யுகபாரதிக்கு வழங்கப்படுகிறது. வாழ்நாள் சாதனையாளர் விருது அமரர்.இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இயக்குனர் பாலுமகேந்திரா நினைவு விருது ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்திற்காக இயக்குனர் ர.பார்த்திபன் அவர்களுக்கு கிடைத்துள்ளது. கே.எஸ்.பாலச்சந்திரன் விருது நடிகர் விவேக் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. நார்வே தமிழ் திரைப்பட விழாவில் “தமிழர் விருதுக்காக” தமிழ்நாட்டுக்கு அப்பால், தமிழர்கள் புலம்பெயர்ந்த தேசங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள படங்களும், கலைஞர்களும். சிறந்த படமாக கே.எஸ் துறை இயக்கத்தில் வெளியான உயிர்வரை இனித்தாய் திரைப்படமும், சிறந்த இயக்குனராக ஸ்டீபன் அவர்களும்(9C ஒஸ்லோ ), சிறந்த நடிகராக ஜெயசாந் கனகலிங்கம் (9C ஒஸ்லோ) அவர்களும், சிறந்த நடிகையாக நேர்வினி டெரியும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த விருதுகள் வழங்கும் விழா நார்வேயின் தலைநகரமான ஆஸ்லோவில் வரும் ஏப்ரல் 26-ந் தேதி நடக்கவுள்ளது. [su_youtube url=”https://www.youtube.com/watch?v=ifHkKaTjf1E”]

ALSO READ:  நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்; பிரதமர் மோடி இரங்கல்!
author avatar
செங்கோட்டை ஸ்ரீராம்
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
ALSO READ:  நடிகர் கிருஷ்ணாவின் 23வது படம்! கிராமத்துக் கதையாம்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week