மலேசிய விமானக் கண்காட்சியில் வெடித்துச் சிதறிய 2 விமானங்கள்

Published:

malaysia-air-crashகோலாலம்பூர்: மலேசியாவில் பயிற்சியின் போது 2 விமானங்கள் நடுவானில் வெடித்துச் சிதறின. அதில் இருந்த 4 விமானிகளும் பாராசூட் உதவியுடன் உடனே குதித்துத் தப்பினர். மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே லங்காவி தீவில் சர்வதேச கடல் மற்றும் விமானக் கண்காட்சி நாளை துவங்கி வரும் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியில் இந்தோனேஷியா உள்பட பல்வேறு நாட்டு விமானங்களும் கப்பல்களும் பங்கேற்கின்றன. இந்நிலையில், லங்காவி தீவில் நேற்று மாலை இந்தோனேஷியாவைச் சேர்ந்த 2 அதிநவீன விமானங்கள் நடுவானில் சாகசத்தில் ஈடுபட்டன. அப்போது ஒரு விமானத்தின் இறக்கை மற்றொரு விமானத்தின் இறக்கையில் உரசியதால், இரண்டு விமானங்களும் நடுவானில் வெடித்துச் சிதறின. இந்த 2 விமானங்களிலும் இருந்த 4 விமானிகளும் பாராசூட் உதவியுடன் கீழே குதித்து உயிர் தப்பினர். விமானங்களில் இருந்து வெடித்துச் சிதறிய பாகங்கள் அருகில் இருந்த வீடுகள் மற்றும் கார்களில் பட்டு எரிந்ததால், அவையும் தீப்பிடித்து சேதமடைந்தன. பாராசூட் மூலம் தரையில் குதித்து படுகாயம் அடைந்த 4 விமானிகளும் பின்னர் லங்காவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை மலேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் ஹிஸ்சாமுதீன் ஹுசைன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். (ஏபிசி நியூஸ்) https://www.youtube.com/watch?v=xI_hvGMZYG4

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img