ஈராக் திக்ரித்தில் சதாம் கல்லறை சண்டையில் சேதம்

Published:

sadam-hussaine-dombபாக்தாத்: ஐஎஸ் பயங்கரவாதிகள் பிடியில் இருந்து ராணுவம் மீட்டெடுத்த திக்ரித் பகுதியில், சதாம் உசேனின் கல்லறை முற்றிலும் சேதம் அடைந்துவிட்டதாக ராணுவம் கூறியுள்ளது. கடந்த ஆண்டு ஈராக்கின் திக்ரித் பகுதியை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றினர். அதனை மீட்க ஈராக் ராணுவம் ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் போரிட்டது. அதைத் தொடர்ந்து சதாம் உசேனின் ஆதரவாளர்கள் அவரது உடலை அதில் இருந்து தோண்டி, வேறு இடத்தில் அடக்கம் செய்தனர். அங்கே கல்லறை மட்டும் இருந்தது. இந்நிலையில், அங்கே சண்டை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து வெடிகுண்டுத் தாக்குதலில் சதாம் உசேன் கல்லறை முற்றிலும் அழிந்து சேதம் அடைந்தது. தற்போது அங்கு கான்கிரீட் கூரைகளின் இடிபாடுகள் மட்டுமே கொட்டிக் கிடக்கின்றன. தற்போது ஐ.எஸ்.தீவிரவாதிகளின் பிடியில் இருந்து திக்ரித் பகுதியை மீட்டு விட்டதாக ராணுவம் அறிவித்துள்ளது.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img