ரயில் பயணச் சீட்டு பெற்ற பிறகு பணம் செலுத்தும் புதிய திட்டம்: அமைச்சர் மனோஜ் சின்ஹா

Published:

manoj-sinha புதுதில்லி ரயிலில் பயணச் சீட்டு பெற்ற பின்னர் பணம் செலுத்தும் புதிய வசதி குறிப்பிட்ட இணையதளம் மூலம் ஜன.1 அன்று தொடக்கப்பட்டதாக அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார். மத்திய ரயில்வே துறையின், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் இ-டிக்கெட் சேவைக்கு, பயணச் சீட்டு பெற்ற பிறகு பணம் செலுத்தும் புதிய திட்டத்தை 01.01.2015 அன்று முன்னோடி திட்டமாக அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:- இத்திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் கீழ்வரும் இணைய தளங்கள் மூலம் பயணச் சீட்டு பெற்ற பிறகு பணம் செலுத்தும் வசதி அல்லது இணைய வழி பணம் செலுத்தும் வசதியை தேர்ந்தெடுக்கலாம். i. www.bookmytrain.com ii. Bookmytrain App on Android platform. iii. Bookmytrain App on Windows platform. iv. Bookmytrain App on BlackBerry platform. v. Bookmytrain App on iOS platform. பயணம் தொடங்குவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு வரை வாடிக்கையாளர்கள் தங்களது பயண சீட்டை பதிவு செய்யலாம். பயணிகளின் வசதிக்காக அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம் வேகமாக பெருகிவரும் கருத்துகளை வைத்து தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா மக்களவையில் இன்று தெரிவித்தார்.

ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img