சென்னை: தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் சமூக சேவகர் டிராபிக் ராமசாமிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம். உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள டிராபிக் ராமசாமி, ஜாமீன் கேட்டு சென்னை எழும்பூர் முதன்மை பெருநகர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி, வாரம் ஒருமுறை நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதித்து அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
- Home
- உள்ளூர் செய்திகள்
- டிராபிக் ராமசாமிக்கு எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்
