புதுமுக இயக்குநரிடமும் கற்றுக்கொள்கிறேன்: நாசர் பேச்சு!

Published:

புதுமுக இயக்குநர் மனோன் .எம் இயக்கியுள்ள படம் ‘கா..கா..கா..’ இது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகி இருக்கிறது.

படத்தின் தலைப்பிலேயே ‘கா..கா..கா..’ ஆபத்தின் அறிகுறி என்று போட்டுள்ளார்கள்.

 இயக்குநர் மனோன் ஒரு பெங்களூர்த்தமிழர்.  இவர் ‘இருவர் மட்டும்’ ராகவன்,பி.வாசு, வெற்றி மாறன் ஆகிய பிரபல இயக்குநர்களிடம் பணியாற்றியுள்ளவர். பொதுவாக காகம் கத்தினால் விருந்தினர் வரவின் அறிவிப்பு என்று நம்பப் படுகிறது. இப்படத்தில் ஆபத்து வரும் அறிகுறியாக காகம் கத்துகிறது.படத்தில் காகம் ஒரு பாத்திரம் போலவே வருகிறது.

அசோக்,மேகாஸ்ரீ ,நாசர்,ஜெயசுதா,யோகிபாபு நடித்துள்ளார்கள்.இப்படம் தமிழ் தெலுங்கு என ஒரு மொழிகளில் தயாராகியிருக்கிறது.அர்பிதா கிரியேஷன்ஸ் சார்பில் கிரண் பதிகொண்டா தயாரித்துள்ளார்.

இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டுவிழா இன்று சென்னை ஆர்.கே.வி.ஸ்டுடியோவில் நடந்தது.தென்னிந்திய நடிகர் சங்கத்தின்  தலைவர் நாசர் ட்ரெய்லரை வெளியிட  இயக்குநர்  வெற்றி மாறன் பெற்றுக்கொண்டார்.

விழாவில் நாசர் பேசும் போது “புதுமுக இயக்குநர்கள் படம் பண்ணும் போது கனவோடு வருகிறார்கள்.அவர்களை நான் ஆதரிக்கத் தயங்குவதில்ல்லை.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

இந்த மனோன் என்னிடம் நடிக்கக் கேட்டு கதை சொன்னபோது நான் எந்த அளவுக்கு அவசியம்? ஏன் நான்  நடிக்க வேண்டும்? என்றேன். அவர் அதற்குச் சரியாகப் பதில் சொன்னது எனக்குப் பிடித்திருந்தது. .ஒவ்வொரு புதுமுக இயக்குநரிடமும்  நான் கற்றுக்கொள்கிறேன். இந்தப் புதுமுக இயக்குநரிடமும் நான் கற்றுக்கொண்டேன். எது வேண்டும் எது தேவை என்பதில் அவர் தெளியாக இருந்தார்.

நல்ல திட்டமிடல் இருந்தது. இன்று டிஜிட்டல் வந்த பிறகு எப்படி வேண்டுமானாலும்  படம் எடுக்கலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் மனோன் அப்படிப்பட்ட ரகமல்ல. அவரிடம் நல்ல திட்டமிடல் இருந்தது.தொழில் சிரத்தை உள்ளவர். முழுப்படத்தையும் திட்டமிட்டு எடுத்தார். இன்று தினசரிப் பத்திரிகையைப் புரட்டிப்பார்த்தால் 60படங்களின் விளம்பரங்கள் வருகின்றன. எதைப்பார்ப்பது என்று மக்களுக்கே குழம்புகிறது.

இருத்தாலும் இந்தப்படம் அதிலும் தனித்து தெரியும்படி வெற்றிபெற வேண்டும். சினிமாவுக்குத் தயாரிப்பாளர் முக்கியம். தயாரிப்பாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.இப்படம் நூறு நாள் ஓடவேண்டும் என்பதை விட முதலில் தயாரிப்பாளர் போட்ட முதலீட்டை திரும்ப எடுத்து வெற்றிபெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். ”என்று வாழ்த்தினார்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img