ரஜினியின் 2.0 ரூ.500 கோடியை வசூல் செய்துவிட்டதாம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான 2.O திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூல் செய்திருப்பதாக படத் தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்துள்ளது.

ரூ.500 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்கப் பட்ட படம் ரஜினியின் எந்திரன் 2.0. இந்தப் படம் வெளியாகி ஒரு வார காலத்துக்குள் ரூ.500 கோடியை எடுத்துவிட்டதாக தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.