அட்டி படத்திற்காக அஜித் ரசிகராக மாறிய மா.கா.பா.ஆனந்த்

Published:

E5 என்டர்டெய்ன்மென்ட் மற்றும் இமேஜனரி மிஷின்ஸ்  தயாரித்து  பரிநிதா புரொடக்‌ஷன்ஸ் சுந்தர்.சி.பாபு வழங்கும்  திரைப்படம் “அட்டி”.   

விஜயபாஸ்கர் இப்படத்தை இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் சுராஜ் அவர்களிடம் மாப்பிள்ளை, அலெக்ஸ்பாண்டியன் ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி “அட்டி” திரைப்படத்தின் மூலம் இயக்குனராகிறார்.

இப்படத்தின் ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ் அர்ஜூன். இவர் மெய்யழகி திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஆவார்.

இசை : சுந்தர்.சி.பாபு. இவர் சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நாடோடிகள், ஆகிய வெற்றிப்படங்களின் வரிசையில் “அட்டி” திரைப்படமும் தமக்கு மாபெரும் வெற்றியை தரும் வகையில் பாடல்கள் அனைத்தும் அனைவரையும் கவரும் வகையில் அற்புதமாக இசையமைத்துள்ளார்.

வானவராயன் வல்லவராயன் படத்தை அடுத்து மா.கா.பா. ஆனந்த் கதாநாயகனாக அறிமுகம் ஆகும் படம் “அட்டி”. சென்னையை மையமாக கொண்ட இக்கதைகளத்திற்கேற்ப தன்னை உருவாக்கிக்கொண்டு கதையின் நாயகனாக மிக அற்புதமாக நடித்துள்ளார்.

கதாநாயகியாக அஷ்மிதா, கதைக்கு ஏற்ற அறிமுகம். மிகவும் சிறப்பாக தனது கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

அட்டி திரைபடத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ராம்கி நடித்துள்ளார். இவர் இதுவரை நடித்த படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வேடத்திலும் கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார். அட்டி திரைபடத்தில் மீசை இல்லாமல் அற்புதமான தோற்றத்துடன் வருகிறார்.

இவர்களுடன் முன்னனி நட்சத்திரங்கள் நான் கடவுள் ராஜேந்திரன், அருள்தாஸ், அழகு, ராம்ஸ், மகாநதி சங்கர், யோகிபாபு, கலை, மிப்பு, தங்கதுரை ஆகியோரும் நடித்துள்ளனர்.

கதைகரு : சென்னையின் மையப்பகுதிகளான காசிமேடு, ராயபுரம், ஐஸ்ஹவுஸ் ஆகிய பகுதிகளில் வசிக்கும் இளைஞர்களின் யதார்த்தமான வாழ்க்கையையும் அன்றாடம் அவர்கள் சந்திக்கும் அனைத்து விஷயங்களையும் சுவாரஸ்யமாக நகைச்சுவையுடன் விவரிக்கும் கதைக்களமே “அட்டி”. இதில் கதாநாயகன் கானா பாடகராகவும், அஜித் ரசிகராகவும் நடித்துள்ளார். கதாநாயகன் தன்னை சுற்றி நடக்கும் ஒரு சம்பவத்தை தன் நண்பர்கள் உதவியோடு எப்படி கையாளுகிறார் என்பதே கதையின் கரு.

Related articles

Recent articles

spot_img