ஜிஎஸ்டி., வருடாந்திர கணக்கு தாக்கலுக்கு அவகாசம் நீட்டிப்பு!

Published:

gst form submission - 2026

கடந்த 2017-18 ஆம் நிதியாண்டுக்கான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நவம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறையில் வரிக் கணக்கு தாக்கல் செய்ய பல்வேறு வடிவங்கள் உள்ளன. இதில் ஆண்டு முழுவதற்கும் ஒரே கணக்கு தாக்கல் செய்யும் படிவம் 9 உள்ளது. இதை அனைத்து ஜிஎஸ்டி வரம்புக்கு உள்ள நபர்களும் தாக்கல் செய்வது அவசியம்.

2017 -18 ஆம் நிதியாண்டுக்கான அவகாசம் வரும் 31ம் தேதி முடிவதாக இருந்தது. அது தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது..

09 June30 GST - 2026

இதுகுறித்து ஜிஎஸ்டி அதிகாரிகள் கூறியபோது… ஜிஎஸ்டி ஆண்டு கணக்கு தாக்கல் செய்ய படிவம் 9 பயன்படுத்தப்படுகிறது! ஆண்டுக்கு இரண்டு கோடி ரூபாய்க்கு கீழ் வரவு செலவு உள்ள அனைத்து வணிகர்களும் படிவம் 9 தாக்கல் செய்ய வேண்டும்!

மொத்தம் இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் வரவு செலவு உள்ள நிறுவனங்கள் படிவம் 9 ஏ மற்றும் 9சி தாக்கல் செய்ய வேண்டும்.

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!

31ஆம் தேதியுடன் இதற்கான கால அவகாசம் முடிவடைய இருந்தது இந்த நிலையில் இந்த அவகாசத்தை நவம்பர் மாதம் வரை நீட்டித்து ஜிஎஸ்டி கவுன்சில் உத்தரவிட்டுள்ளது என்று கூறினர்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img