
அரசிடமிருந்து புதிதாக எந்த நிதி உதவியும் தேவையில்லை என்று எஸ்பிஐ எனப்படும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது!
இதுகுறித்து எஸ்பிஐ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அர்ஜித் பாசு கூறியுள்ளதாவது… வங்கியில் போதுமான அளவுக்கு மூலதன வசதி உள்ளது! எனவே நடப்பு நிதியாண்டில் அரசிடமிருந்து புதிதாக எந்த ஒரு நிதி உதவியும் தேவையில்லை.
எங்கள் வங்கியைப் பொறுத்தவரை நாங்கள் எந்த வித மூலதன உதவியையும் எதிர்பார்க்கவில்லை! தேவையான நிதியை சந்தையிலிருந்து திரட்டிக் கொள்ளும் நிலையில் இருக்கிறோம்!
ஏற்கெனவே பத்திரங்கள் வெளியிடுவது குறித்து அறிவித்து உள்ளோம்! மேலும் ஏற்கனவே இருக்கும் முதலீட்டை விற்பனை செய்வதன் மூலமும் நிதி திரட்டுவது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.
நிதி திரட்டி கொள்வதற்காக சந்தையை அணுக முடியாத நிலையில் இருக்கும் வங்கிகளுக்கு மத்திய அரசின் மூலதன உதவி தேவைப்படும் !ஏற்கெனவே நான்காவது காலாண்டின் போது எஸ்பிஐ கார்டு நிறுவனம் பங்கு வெளியீட்டுக்கு வர இருப்பதாக அறிவித்து உள்ளோம். மேலும் சில துணை நிறுவனங்கள் குறித்து ஆலோசித்து வருகிறோம்” என்று கூறினார்



