sindhu modi deepika - 2026

நம் நாட்டில் வெற்றிகளை சாதித்த பெண்களின் சிறப்பை உலகிற்கு அடையாளம் காட்டுவதற்கு இந்த தீபாவளியை பாரத் கீ லட்சுமி என்ற பெயரோடு கொண்டாடுவோம் – என்று பிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத் நிகழ்ச்சியின் வாயிலாக அழைப்பு விடுத்தார்.

அந்த முழக்கத்திற்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்தது. பாரத் கீ லட்சுமி என்ற ஹேஷ்டேக் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்தப் புரட்சிக்கு ஸ்டார் ஷட்லர் பிவி சிந்து, பாலிவுட் ஹீரோயின் தீபிகா படுகோனே இருவரும் பிரசாரகர்களாக விளங்க உள்ளார்கள்.

இதுதொடர்பாக அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு வீடியோவை தயாரித்து உள்ளார்கள்.

“பெண்களுக்கு சரியான அதிகாரம் கிடைத்து அவர்கள் சாதித்த சிறப்புகளுக்கு சரியான இடம் கிடைக்கும் போதே இந்த சமுதாயம் உண்மையில் வளர்ச்சி அடைந்ததாகும். நான் பிரதமர் மோடி அவர்களின் பாரத் கீ லட்சுமி முழுக்கத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கிறேன். இதன் மூலம் நம் நாட்டின் அசாதாரணமான பெண்கள் சாதித்த அசாதாரண சிறப்புகளைப் பகிர்ந்து கொண்டு தீபாவளி பண்டிகையை கொண்டாடுவோம்” என்று பிவி சிந்து தன் வீடியோவை ஷேர் செய்துள்ளார்.

“ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற கனவும் விருப்பமும் இருக்கும் . அவற்றை சாதிக்க வேண்டுமென்றால் எத்தனையோ சவால்களை எதிர்கொள்ள வேண்டிவரும். இந்த தடைகளை தாண்டுவதற்கு வேண்டிய பலத்தை நாம் தேர்ந்தெடுத்த இலக்கே நமக்கு அளிக்கும். நம் வீடுகளில் இருக்கும் பெண்களை லட்சுமி தேவியாக மதிப்போம் . வீட்டில் பெண்கள் இருந்தால் அந்த வீடு சுக சந்தோஷங்களோடு விளங்கும். நம் நாட்டில் பெண்கள் சாதித்த சிறப்புகள் நமக்கு பெருமை அளிப்பவை. அதனால் இந்த தீபாவளியை பெண்களுக்கு அர்ப்பணிப்போம்” என்று சிந்துவும் தீபிகாவும் இந்த வீடியோவில் கூறியுள்ளார்கள்.

ALSO READ:  தொடரும் தெய்வத்திருமேனிகள் திருட்டு; இந்து முன்னணி கண்டனம்!

“உங்களுக்குத் தெரிந்த பெண்கள் சாதித்த சிறப்புகளை பாரத் கீ லட்சுமி என்ற ஹேஷ்டேக் மூலம் ஷேர் செய்யுங்கள்!” என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

அதோடு இந்த வீடியோவிற்கு பிரதமர் மோடி பாராட்டு மழை பொழிந்துள்ளார்.

“நம் கலாச்சாரம் பெண்கள் தங்கள் அதிகாரங்களை எவ்வாறு சாதிக்க வேண்டும் என்பதை எப்போதிலிருந்தோ சொல்லி வருகிறது. இந்த வீடியோ மூலம் பிவி சிந்து, தீபிகா படுகோனே இருவரும் பாரத் கீ லட்சுமி முழக்கம் பற்றி அற்புதமாக விவரித்துள்ளார்கள்” என்று பிரதமர் மோடி டிவிட் செய்துள்ளார்.

ALSO READ:  இடதுசாரிகளின் இரட்டை வேடம்: தியானமென் சதுக்கமும் ஜன்தர்மந்தரும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending