பிறப்பு சான்றிதழில் குழந்தைகள் வயது 100, 102! லஞ்சம் தர மறுத்ததால் பழி வாங்கிய அதிகாரி!

Published:

babys - 2026

உத்தர பிரதேசத்தில், ரூ.1000 லஞ்சம் கொடுக்க மறுத்ததைத் தொடர்ந்து, கோபத்தில் குழந்தைகளின் வயதை 100, 102 ஆக குறிப்பிட்டு பிறப்புச் சான்றிதழ்களை வழங்கிய கிராம நிர்வாக அதிகாரி மறறும் கிராமத் தலைவர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு பரேலி நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம் மிமாநிலம், பரேலி மாவட்டம் ஷாஜகான்பூரின் குத்தர் காவல் நிலைய எல்லைக்குள் வரும் பேலா கிராமத்தை சேர்ந்தவர் பவன்குமார். இவர், தன் மகன்களான சுப்(4), சங்கெட்(2) ஆகிய இருவருக்கும் பிறப்புச் சான்றிதழ் வேண்டி இரு மாதங்களுக்கு முன்பு, இணையம் மூலம் விண்ணப்பித்துள்ளார்.

இருவருக்கும் பிறப்பு சான்றிதழ் வழங்குவதற்காக, கிராம நிர்வாக அதிகாரி சுஷில் சந்த் அக்னிஹோத்ரி, கிராமத் தலைவர் பிரவீன் மிஸ்ராவும், பவன்குமாரிடம், ரூ.1000 லஞ்சம் கேட்டுள்ளனர். லஞ்சம் கொடுப்பதற்கு பவன்குமார் மறுத்துள்ளார்.

இதனால், கோபம் அடைந்த, கிராம நிர்வாத அதிகாரியும், கிராம தலைவரும், குழந்தைகளின் பிறந்த ஆண்டை, தங்கள் விருப்பத்திற்கு மாற்றம் செய்து, பிறப்புச் சான்றிதழ் அளித்துள்ளனர்.

அவர்கள் அளித்துள்ள சான்றிதழ்களின்படி, இரண்டு வயதான சங்கெட்டின் பிறந்த தேதி ஜூன் 13, 2018 க்கு பதிலாக ஜூன் 13, 1916 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று, நான்கு வயதான சுப்பின் பிறந்த தேதி ஜனவரி 6, 2016 க்கு பதிலாக ஜனவரி 6, 1918 என குறிப்பிடப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, குழந்தையின் தற்போதைய வயது 100 மற்றும் 102 ஆகிறது.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இதனால் அதிர்ச்சி அடைந்த பவன்குமார், எனது மகன்களான சுப்(4), சங்கேத்(2) ஆகியோரின் பிறப்புச் சான்றிதழ்கள் தவறான பிறப்பு தேதியுடன் வழங்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். முடிவில், நீதிமன்ற உத்தரவை அடுத்து, கிராம நிர்வாக அதிகாரி மற்றும் கிராமத் தலைவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related articles

Recent articles

spot_img