CAA விற்கு எதிராக போராட்டம்… இஸ்லாமிய அமைப்புகளின் வங்கி கணக்கில் 120 கோடி டெபாசிட்! அமலாக்கத் துறை தகவல்!

இந்தியா பொது தகவல்கள்
caa - 2026

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்த பல அமைப்புகளுக்கு பண செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டங்களை தூண்டி விடுவதற்காக கேரளாவை சேர்ந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் சில தனிநபர் வங்கி கணக்குகளில் 120 கோடி ரூபாய் பணம் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக உத்திரப்பிரதேச மாநிலத்தில் பெரும் போராட்டங்கள் நடைபெற்ற கடந்த டிசம்பர் (2019) 4-ம் தேதி முதல் ஜனவரி (2020) 6-ம் தேதி வரையிலான கால கட்டத்தில் இந்த பணப்பரிவர்த்தனை நடத்திருப்பதால் சந்தேசகம் மேலும் வலுப்பெற்றுள்ளது.

இந்த காலக்கட்டத்தில் மொத்தம் 1 கோடியை 4 லட்சம் ரூபாய் 73 வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டு 2000 ரூபாய் முதல் 5000 வரை தனி நபர்களின் வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டதை முதற்கட்ட விசாரணையில் அமலாக்கத்துறையினர் கண்டுப்பிடித்துள்ளனர்.

இந்த பணப்பரிவர்த்தனை தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.