கொரோனா: புதிய பரிசோதனை வசதி 3 மாநிலத்தில் தொடங்கி வைத்த பிரதமர்!

இந்தியா சற்றுமுன்
modi 4 - 2026

கொரோனா தொற்றுக்கு மத்தியில் பிரதமர் மோடி இன்று மூன்று உயர் செயல்திறன் கொரோனா சோதனை வசதிகளை வீகாணொலி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இன்று நொய்டா, மும்பை, கொல்கத்தாவில் புதிய கொரோனா பரிசோதனை வசதிகளை நாளை காணொலியில் தொடங்கி வைக்கவுள்ளார் பிரதமர் மோடி

இதன் மூலம் ஒரு நாளில் 10,000 க்கும் மேற்பட்ட மாதிரிகளை சோதிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை வசதிகள் மூலம் சிகிச்சையை அதிகப்படுத்தவும் தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனை வசதி கொரோனாவை தவிர ஹெபடைடிஸ் பி மற்றும் சி, எச்.ஐ.வி, மைக்கோபாக்டீரியம் காசநோய், சைட்டோமெலகோவைரஸ், கிளமிடியா, நைசீரியா, டெங்கு போன்றவற்றையும் சோதிக்க முடியும என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலன் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் மற்றும் உத்தரப்பிரதேச முதலமைச்சர்கள் பங்கேற்றனர்.

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.