கிணற்றிலிருந்து கிடைத்த சடலம்! நண்பர்கள் வெட்டி வீசிய அவலம்!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
Screenshot_2020_0819_091435

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் பகுதியை சேர்ந்தவர் பிரதாப். இவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் இருக்கும் தனியார் கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

கடந்த ஜூன் மாதத்தின் போது இவர் காணாமல் போயுள்ளதாக, அவரது பெற்றோர் ஓரகடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்ட நிலையில், நண்பனின் மனைவி குறித்து அவதூறாக பேசியது தெரியவந்துள்ளது. மேலும், இதனால் ஆத்திரமடைந்த பிரதாப்பின் நண்பர்கள் 3 பேர், பிரதாப்பின் தலையை வெட்டி கொலை செய்து, கிணற்றில் உடலை வீசியது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கபட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஒரகடம் வடக்குபட்டு கிராமத்தில் இருக்கும் கிணற்றில் இருந்து நீரை வெளியேற்றும் பணியும் நடைபெற்று வந்தது. இதன் பின்னரே உடல் மற்றும் தலையை மீட்டனர்.

இந்த உடல் மற்றும் தலையை பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் குற்றவாளிகளாக கருதப்படும் நபர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ALSO READ:  ஜெனகை மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர வளையல் அணிவித்து வழங்கல்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.