கொரோனா: எம் ஆர் விஜயபாஸ்கர்,மனைவி, மகள் ஆகியோருக்கு தொற்று!

சற்றுமுன் தமிழகம்
Screenshot_2020_0819_090708

தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் அவரது மனைவி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்தனர்.

அதேபோல மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பி தற்போது அமைச்சரவை கூட்டம் உள்ளிட்டவற்றில் பங்கேற்று வருகிறார். இதுமட்டுமின்றி கிட்டத்தட்ட 35 -க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து கொரோனா பரிசோதனை செய்த போது அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், அவரது மனைவி மற்றும் அவரது மகளுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மூன்று பேரும் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.