To Read it in other Indian languages…

Home ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் விநாயகர் சதுர்த்தி: கணேசனின்வெவ்வேறு வடிவங்கள்..!

விநாயகர் சதுர்த்தி: கணேசனின்வெவ்வேறு வடிவங்கள்..!

vinayagar

கண்பார்வை தந்தருளும் விநாயகர்

தமிழகத்தின் கோயமுத்தூரில் சிவானந்தபுரம் பகுதியில் இயங்கி வரும் சங்கரா கண் மருத்துவமனையில் நந்தவனத்தில் ஒரு விநாயகர் கோவில் உள்ளது விநாயகர் சுதர்சன விநாயகர் என்று அழைக்கப்படுகிறார் வலம்புரி தும்பிக்கையுடன் இடது கையில் கண்விழி ஒன்றை ஏந்தி கொண்டு வலது கரத்தை அபயஹஸ்தம் ஆக வைத்துக் கொண்டு நோயாளிகளுக்கு அருள்பாலிக்கிறார் கண்களுக்கு சிகிச்சை பெற வருபவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்புபவர்கள் இந்த சுதர்சன விநாயகரை வணங்கி வேண்டிக் கொண்டு செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.

வயிறு தாரிப் பிள்ளையார்

காஞ்சிபுரத்தில் தேவாரம் பாடல் பெற்ற திருத்தலங்களுள் ஒன்று ஓணகாந்தன் தளியில் உள்ளஓணேஸ்வரர் கோவில். இந்த இறைவனிடம் சுந்தரர் அடிமைத் திறம் பேசி நெய்யும் பாலும் தயிரும் கொண்டு என்று பதிகம் பாடி அருள் பெற்றார் என்பது வரலாறு. இப்பகுதியில் சுந்தரர் குறிப்பிட்டதற்கு ஏற்ப இங்குள்ள பிள்ளையாருக்கு வயிறு தாரி பிள்ளையார் என்று பெயர். தனி சன்னதியாக உள்ளது.

கணேசபுராணத்தில் பிரம்மன் விஷ்ணு ருத்ரன் ஆகிய மூவரையும் கணசரேவ தோற்றுவித்து அவர்களுக்குப் படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய முத்தொழில்களையும், நிறைவேற்றுவதற்குரிய ஆற்றலையும் வழங்கி அருளினார் என்று கூறப்படுகிறது. அவர்களுக்கு தமது ஒப்பற்ற விஸ்வரூபம் காட்டி அருளினார் என்றும் கூறப்பட்டுள்ளது. பிரம்மனுடைய பெண்களான சித்தி புத்தி ஆகிய இருவரையும் விநாயகர் திருமணம் செய்துகொண்டு சித்தி புத்தி விநாயகர் ஆக திகழ்ந்தார் என்றும் கூறுகிறது

விநாயகர் சிங்கத்தின் மீது அமர்ந்திருக்கும் காட்சி சென்னைக்கு அருகில் உள்ள திருவொற்றியூரில் காயிதே மில்லத் மாவட்டத் தலைநகர் நாகப்பட்டினத்திலும் காணலாம்

வெள்ளை விநாயகர் பிடித்து வழிபடுவது போல உருவாக்கிய விநாயகரை திருவலஞ்சுழி விநாயகர் இவருக்கு பச்சைக்கற்பூரம் போவதைத் தவிர வேறு அபிஷேகம் கிடையாது இக்கோயில் கும்பகோணத்தில் உள்ளது

ஆழத்துப் பிள்ளையார் கோயிலில் பூமிக்கடியில் 18 அடி ஆழத்திற்கு கீழே காணப்படுபவர் ஆழத்துப் பிள்ளையார்.

ஐந்து கரத் தான் எனப்படும் விநாயகர் பிள்ளையார் பட்டியில் இரண்டு திருக்கரங்களுடன் சங்கு சத்தம் இல்லாமல் துதிக்கை வழியாக அர்த்த பத்மாசனத்தில் கால்களை மடித்து இருக்கிறார் வலக்கரத்தில் மோதகம் தாங்கி இடக்கரத்தில் இடையில் பொருந்திய பெருமிதத்தோடு காட்சி தருகிறார்.

கருப்பு வெள்ளை விநாயகர் கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் உவரியில் கேரளபுரம் எனும் ஊரில் ஆலமரத்தடியில் விநாயகர் இருக்கிறார் ஆவணி மாதம் முதல்தை மாதம் வரை வெண்மையாகவும் மாத்தி முதல் ஆடி வரை கருப்பாகவும் காட்சிதருகிறார்.

ஞான சம்பந்த விநாயகர் திருஞானசம்பந்தப் பெருமான் தேரழுந்தூருக்வகு எழுந்தருளிய போது திருமால் கோயில் எது சிவன் கோயில் எது என்று புரியாமல் திகைக்க சாலையின் அருகே கோயில் கொண்டிருந்த சாலை விநாயகர் அதோ ஈஸ்வரன் கோயில் என கிழக்கு திசையை காட்டினார் அன்றுமுதல் சாலை விநாயகர் ஞான சம்பந்த விநாயகர் ஆனார்

ஆயிரமும் விநாயகரும் கும்பகோணத்தில் உள்ள விநாயகருக்கு கரும்பாயிரம் கொண்ட விநாயகர் என்றும் திருவண்ணாமலை ஆலயச் சுவரில் ஒரு ஜான் உயரமே கொண்ட விநாயகருக்கு ஆயிரம் யானை திறை கொண்ட விநாயகர் என்றும் திருநெல்வேலி நகரில் எண்ணாயிரம் பிள்ளையார் என்றும் ஆறுமுகமங்கலம் கினாக்குளம் ஆகிய ஊர்களில் ஆயிரத்தெண் விநாயகர் எனும் பெயர்களிலும் வழிபடப்படுகிறார்.

நாலாயிரத்து ஒரு விநாயகர் 4000 முனிவர்கள் அஸ்வமேத யாகம் செய்தனர் விநாயகரை வழிபட மறந்ததால் முனிவர்களுக்கு மந்திரம் மறந்து யாகம் தடைபட்டது நாரதர் வாக்குப்படி விநாயகரை வழிபட்டு பூர்த்தியாகிறது விநாயகரும் யாகத்தில் கலந்து கொண்டார் அவரை நாலாயிரத்து ஒரு விநாயகர் சீர்காழிக்கு கிழக்கே 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருநாங்கூர் செல்லும் வழியில் திருமணிக்கூடம் வைணவ திருப்பதியில் உள்ள சுயம்பு மூர்த்தி இவர் தெற்கு நோக்கிய சந்நிதி அபிஷேகம் செய்யும் நீர் சிலையின் உள்ளே சென்று விடுமாம்

தனி விநாயகர் ஆலயம் தென்னாட்டில் விநாயகர் என்று தன் இத்தலம் உள்ள இடம் பிள்ளையார்பட்டி விநாயகர் தன் இத்தலம் உள்ள இடம் மகாராஷ்டிரத்தில் உள்ள கணேஷ் கிண்ட்

கணேசாயினி :சுசீந்திரம் தாணுமாலய பெருமாள் கோவிலில் விநாயகரின் திருவுருவம் உள்ளது ஒரு காலை மடித்து மற்றொரு காலைத் தரையில் ஊன்றிக்கொண்டு சுகாசன நிலையில் பாசம் அங்குசம் ஏந்தி அபய வரத முத்திரைகளுடன் நான்கு கரங்களுடன் விளங்குகிறார்

ஷோடச கணபதி ராமேஸ்வரம் சங்கரமடத்தில் சிலை வடிவில் ஒரே தூணில் 16 வகையான கணபதி திருமேனிகளை காணலாம்.

புலி பாத கணேசர்: மதுரைக் கோவிலில் துவாரபாலகர் அருகே கம்பத்தடி மண்டபத்தில் வியாக்ரபாத கணேசினி என்றும் திருவுரவம் இரண்டு கைகளுடன் ஒரு கையில் தாமரை மலர் ஏந்தி மற்றொரு கையை தொங்கவிட்டுக் கொண்டு உள்ளது

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − six =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.