இனி வாராவாரம் ஆரவாரம்! அஜித்தின் உத்தரவால் ரசிகர்கள் மகிழ்ச்சி!

Published:

valimai 2 - 2026

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தினை எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரித்து வருகிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

படம் ஆயுத பூஜை விருந்தாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் அப்டேட் எதுவும் ஒன்றரை வருடங்களாக வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் கடந்த வாரம் தான் மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவை வெளியானது.

இந்த நிலையில் தற்போது தல அஜித் படக்குழுவினருக்கு கண்டிஷன் ஒன்றை விதித்துள்ளார். அதாவது இனி வாரம் வாரம் என்னுடைய ரசிகர்களுக்கு அப்டேட்ஸ் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளாராம்.

இதனால் இனி வாரம் வாரம் அஜித் ரசிகர்களுக்கு செம கொண்டாட்டமாக தான் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

Related articles

Recent articles

spot_img