கல்லூரி இறுதி தேர்வுகள்: இந்த மாத இறுதிக்குள் நடத்த யுஜிசி சுற்றறிக்கை!

Published:

21 July12 Neet exam

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழங்களுக்கு இறுதி பருவத் தேர்வுகளை இந்த மாதம் 30 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் – யுஜிசி சுற்றறிக்கை.

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக பல மாநிலங்கள் அறிவித்துள்ளன.

ஆனால், பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என பல்கலைக் கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்தது. இதற்கு, மாணவர்களின் உயிரோடு யுஜிசி விளையாடுகிறது என மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இருப்பினும், அது தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.

இதனால், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 31 மாணவர்கள், யுஜிசி.யின் உத்தரவை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கல்லூரி, பல்கலைக் கழங்களின் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய முடியாது என்றும் இத்தேர்வுகளை நடத்த, யுஜிசி.க்கு தடை எதுவுமில்லை எனவும் கூறியுள்ளது.

இதில் யுஜிசி.க்கு தான் முழு அதிகாரம் உள்ளது. தேர்வுகளை நடத்தாமல் மாணவர்களை கண்டிப்பாக தேர்ச்சி பெற செய்யக்கூடாது. இறுதியாண்டு தேர்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதில் தேர்ச்சி பெற்று பட்டம் வாங்கினால்தான், சதவீதத்தின் அடிப்படையில் மாணவர்கள் உயர் படிப்புக்கு செல்ல முடியும்.

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

இது, மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட விஷயம். ஒருவேளை தங்கள் மாநிலங்களில் இந்த தேர்வை நடத்தும் சூழல் தற்போது இல்லை என்றால், தேர்வை ஒத்திவைப்பது குறித்து யுஜிசி.யிடம் மாநில அரசுகள் முறையிடலாம். மாணவர்கள் தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

இந்நிலையில், பல்கலைக் கழக மானியக் குழு (யுஜிசி) சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், இந்திய முழுவதும் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் இறுதி பருவத் தேர்வுகளை இந்த மாதம் 30 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

ugc
ugc

Related articles

Recent articles

spot_img