பெண்களுடன் ‘எசகுபிசகாக’ இருந்த போலீஸ்காரர்! காட்டிக் கொடுத்த மனைவியால் கிடைத்த ‘தர்ம அடி’!

Published:

policeman got redhanded
policeman got redhanded

கணவனை கையும் களவுமாகப் பிடித்த மனைவி எப்படி அடிக்கிறாள் பாருங்கள்…

திருமணத்தை மீறிய உறவுகளால் வாழ்க்கை பலியாகிறது. குடும்பங்கள் வீதிக்கு வருகின்றன.

மெஹபூபாபாத் மாவட்டம் பால்வஞ்ச என்ற இடத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தது.

அங்குள்ள காவல் நிலையத்தில் ராஜேஷ் ஹெட் கான்ஸ்டபிளாக பணிபுரிகிறார். ராஜேஷுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்வப்னா என்ற பெண்ணோடு திருமணம் நடந்தது. சமீபத்தில் ராஜேஷ் வேறொரு பெண்ணை மறு விவாகம் செய்துகொள்ளப் போகிறேன் என்று கூறி மனைவியை துன்புறுத்தத் தொடங்கினார். அதோடு மட்டுமன்றி 10 பெண்களோடு ராஜேஷுக்கு தொடர்பு இருப்பதாக தெரிகிறது. இந்த குற்றச்சாட்டால் ராஜேஷ் தற்போது சஸ்பென்ஷனில் இருக்கிறார்.

மனைவி ஸ்வப்னா எத்தனை தூரம் வேண்டிக்கொண்டாலும் கணவரின் நடவடிக்கையில் மாற்றம் தெரியாததால் மனைவிக்கு எரிச்சல் ஏற்பட்டது. அதனால் தன் கணவனின் நடவடிக்கையை வீடியோ எடுத்து வெளியிட்டார்.

தன் கணவன் வேறொரு பெண்ணோடு அறையில் இருக்கும் விஷயத்தை அறிந்து கொண்ட ஸ்வப்னா மீடியாவையும் ஊரிலுள்ள பெரியவர்களையும் அழைத்துக் கொண்டு அங்கு சென்று கதவை தட்டினார். உள்ளே தன் கணவரோடு இருந்த பெண்ணைப் போட்டு அடித்தார். கணவருக்கும் 4 அடி விழுந்தது. தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

ஸ்வப்னா தன் கணவரை ரெட் ஹாண்டடாக பிடித்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இப்படிப்பட்ட… திருமணத்திற்கு அப்பால் தொடர்புகள் வைத்துக்கொண்டு மனைவியின் வாழ்க்கையோடு விளையாடுகின்ற ஆண்களுக்கு எப்படிப்பட்ட தண்டனை கொடுக்க வேண்டும்…? இந்த அபிப்ராயங்களை காமென்டில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img