துபையில் ராகுலுக்கு மரண அடி கொடுத்த சிறுமி! இமேஜ் டேமேஜ் ஆனதால் லைவ் கட் ஆகி… அசடு வழிந்த கேவலம்!

ராகுலிடம் நச்சென்று இரு கேள்விகளைக் கேட்ட சிறுமியால் சமூக வலைத்தளங்கள் நிரம்பியுள்ளன. இதனால் துபையில் கூடியிருந்த கூட்டமும் அதிர்ந்தது. நேரலை துண்டிக்கப்பட்டு டேமேஜான இமேஜ் சரி செய்ய ரொம்பவே பிரயத்தனப் பட்டார்கள்.

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்ற பின்னர் துபைக்கு இரண்டு நாள் பயணமாக சென்றார். அவரது பயணத்தை வெற்றிகரமாக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப் பட்டன. கேரளாவில் காங்கிரச் கூட்டாளியான இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் சார்பில் துபையில் பகிரங்க அறிவிப்பு செய்யப் பட்டது. தேர்தல்கள் வருவதால், ராகுலுக்கு பிரமாண்ட வரவேற்பும், நிகழ்ச்சிகளில் மிகப் பெரும் ஒப்பனைகளும் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது.

அதன்படி, பள்ளி கல்லூரிகளில் பயிலும் இந்திய வம்சாவளி சிறுவர்கள் சிறுமிகள், மாணவர்கள் வலுக்கட்டாயமாக வரவழைக்கப் பட்டார்கள்.

இந்நிலையில், துபை இளவரசர் உடனான சந்திப்பை முடித்துக் கொண்டு இந்தியர்கள் பங்கேற்ற மாநாடு ஒன்றில் கலந்து கொண்டார் ராகுல் காந்தி. உரையாடல் காங்கிரஸின் தளத்தில் நேரலையாக ஒளிபரப்பானது. தொடர்ந்து, அவருடைய உரையாடலுக்குப் பின் ஏதாவது கேள்விகள் இருக்கிறதா என இந்தியர்களிடம் கேள்வி கேட்டார் ராகுல். அவரிடம் கேள்விகளைக் கேட்க பலரும் ஆர்வமாக இருக்க… கூட்டத்தில் இருந்த 14 வயது சிறுமி ஒருவர் கையை உயர்த்தவே அவரிடம் மைக்கை கொடுங்கள் என்றார் ராகுல் காந்தி. அங்கு கூடியிருந்த ஒட்டுமொத்த மக்களும் அமைதிகாக்க சிறுமி தன்னுடைய கேள்வியை கேட்டார்… அனைவருக்கும் வணக்கம் என்று கூறி தனது கேள்வியைத் தொடங்கினார்….

முதல் கேள்வியாக, இந்தியாவில் மதவாதம் அதிகரித்துவிட்டதாக சொல்லும் நீங்கள் குஜராத் தேர்தல் நடந்தபோது மட்டும் பட்டையாகப் போட்டுக் கொண்டு கோவிலுக்கு சென்றீர்களே ..அதேமாதிரி காஷ்மீர் செல்லும் போது குல்லா அணிந்து போகிறீர்களே… ஏன் அப்படி என கேட்டார்?
இதற்கு பதிலளித்த ராகுல் அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்துகிறோம் என்பதை உணர்த்துவதற்காகத்தான் என்றார்.

அடுத்ததாக சுதந்திர இந்தியாவில் கடந்த கால ஆட்சியில் 80 சதவீத ஆண்டுகள் காங்கிரஸ்தான் பொறுப்பில் இருந்து இருக்கிறது என்று சொல்கிறீர்கள்… அப்போது செய்யாத நாட்டின் வளர்ச்சி நன்மை குறித்து இனிமேல் ஆட்சிக்கு வந்து செய்துவிடப் போகிறீர்களா..? என்று கேட்டபோது, ராகுலால் பதில் ஏதும் சொல்ல முடியவில்லை. அசடு வழிந்தார். தயங்கினார். அவரது முகத்தை அவருக்கே உரிய பாணியில் அப்பாவித்தனமாக வைத்துக் கொண்டு, திக்கித் திணறினார்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் ஐடி பிரிவினர், உடனடியாக நேரலையை துண்டித்தனர்.

அதன் பின்னும், அந்தச் சிறுமி சொன்னதுதான் தேச பக்தியின் உச்சம்! நாட்டின் சுயகவுரவத்தின் மதிப்பை உணர்ந்த அந்தச் சிறுமிக்கு இருக்கும் தன்மை கூட இல்லாத நிலையில் ராகுல் தலையைச் சொறிந்து கொண்டு நின்றார் என்பதைப் பார்த்து ஏளனச்சிரிப்புகளை சிதறவிட்டார்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்.

அந்தச் சிறுமி சொன்னது இதைத்தான்… மோடி ஆட்சிக்கு வந்த பிறகு தான் வெளி நாட்டில் வசிக்கக்கூடிய மக்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது! நாங்கள் கௌரவத்துடன் பார்க்கப்படுகிறோம். எங்களை மதிக்கிறார்கள். எனவே இனிமேல் வாக்கு கேட்கும் போது மதவாதம் என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் ஊழல் இல்லாத ஆட்சியை தருவோம் என வாக்குறுதி அளித்துக் கேளுங்கள்… என்று அட்வைஸ் வேறு கொடுத்தார் அந்தச் சிறுமி.

எனவே, இந்திய மக்கள் கண்டிப்பாக இது குறித்துச் சிந்தித்து நல்ல முடிவை எடுப்பார்கள் என அந்தச் சிறுமி ராகுல்காந்தியிடம் தெரிவிக்க கூட்டத்தில் இருந்த அத்தனை பேரும் மௌனம் காத்தார்கள். இதைத் தொடர்ந்து, பெருத்த கைதட்டல் ஒலித்தது. அரங்கம் அதிர்ந்தது. சிறுமி, தன் தேசபக்தியை வெளிப்படுத்திவிட்டார்.

இப்போது இந்தச் சிறுமியின் திறமையான கேள்விக்கும் தைரியத்திற்கும் உலக அளவில் இருக்கக்கூடிய தமிழ் வாழ் மக்கள் தொடர்ந்து தங்களது பாராட்டுகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

மோடியை எதிர்ப்பதாக, ராகுல் காந்தி தனது நாட்டை தாழ்வுபடுத்தியும் கேவலப் படுத்தியும் வெளிநாடுகளில் தொடர்ந்து பேசி வருவது, இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் விரோதிகளிடம் உறவாடும் ராகுல் காந்தி, வெளிநாட்டுக்காரர்கள் தொடங்கிய காங்கிரஸ் கட்சி, தற்போதைய வெளிநாட்டுத் தலைமை, வெளிநாட்டினர்தான் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் அதிகம் சுருட்டிக் கொண்டு ஓடினர் என்றெல்லாம் டிராக் ரெக்கார்ட் வைத்திருக்கும் நிலையில், வெளிநாட்டினருக்கு வக்காலத்துக்கு வாங்கிக் கொண்டிருக்கும் ராகுல் காந்தி, அதே வெளிநாட்டில்தான், ஒரு இந்திய வம்சாவளிப் பெண்ணால் மூக்குடை பட்டிருக்கிறார் என்று கலாய்க்கிறார்கள் சமூகத் தளங்களில்!

News Source: My Nation

Donate to Dhinasari News! Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when people start contributing towards the same. Please consider donating towards this endeavour to fight fake news and misinformation.