போர்க்களத்தில் நடத்துவோம் பேச்சுவார்த்தையை! : கௌதம் காம்பிர் ஆவேசம்!

இந்தியா சற்றுமுன்

gauatam gambir - 2026

காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் நேற்று பாகிஸ்தான் ஆதரவு பெற்ற இஸ்லாமிய பயங்கரவாத இயகமான ஜெய்ஷ் இ மொஹம்மத் பயங்கரவாதிகள், இந்திய ரணுவத்தினர் மீது சுமார் 350 கிலோ வெடிமருந்துப் பொருள்களுடன் திடீர் தாக்குதல் நடத்தியதில், இந்திய ராணுவ வீர்ர்கள் 40க்கும் மேற்பட்டோர் வீரமரணம் அடைந்தனர்.

இந்தச் சம்பவத்துக்கு உலகெங்கிலுமிருந்தும் கண்டனங்கள் வலுத்துள்ளன. பொதுமக்கள் ஆவேசத்துடன் பொங்கி எழுந்து பயங்கரவாதிகளுக்கு எதிரான கோபத்தை வெளிப்படுத்தியுள்ளன்ர்.

இந்நிலையில் கிரிக்கெட் வீரர் கௌதம் காம்பிர் ஆவேசத்துடன் கூறியுள்ள கருத்து இது….

”ஆம், பிரிவினைவாதிகளுடன் பேசுவோம். ஆம், பாகிஸ்தானுடனும் பேசலாம். ஆனால் பேச்சுவார்த்தை, மேசையைச் சுற்றி இருக்கக் கூடாது. போர்க்களத்தில்தான் இருக்க வேண்டும். இதுவரை பொறுத்தது போதும். ஸ்ரீநகர் – ஜம்மு நெடுஞ்சாலையில் நடந்த குண்டுவெடிப்பில் சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.